கம்பராமாயணம் 8119 · யுத்த 18.72

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக் கணத்து, அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளியாய் அவண்
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள்புடைத்து உருமு போல் உறா,
‘இக் கணத்து அவன் இறக்கும் ‘என்பது ஒரு குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக்கிரி, சொரிந்து வாளிகளின், ஊழ் இலாத சிறு பூழியாய்.

பொருள் · Meaning in Tamil

அக்கணத்து - அப்பொழுது; அனுமன் - அனுமன்; ஆலகாலம் - ஆலகால நஞ்சு; எனலாயது - என்று கூறும் படியாக (உள்ள); ஓர் வெகுளி ஆயினான் - ஒப்பற்ற சினத்தைக் கொண்டவனாய்; புக்கு - (அப்போர்க்களம்) புகுந்து; அனைத்து உலகமும் குலுங்க - எல்லா உலகங்களும் (அஞ்சி நடுங்கிக்) குலுங்கும் படியாக; நிமிர்தோள் புடைத்து - (தனது) உயர்ந்த தோளைத் தட்டி; உருமு போல் உறா - இடிபோல் பொருந்தி பேரொலி செய்து; இக்கணத்து இவன் இறக்கும் என்பது - இப்பொழுதே இந்த இந்திரசித்தன் இறந்து ஒழிவான் என்று பார்த்தவர் கூறும் படியாக; ஒரு குன்று எடுத்து - ஒரு (பெரிய) மலையை எடுத்து; மிசை ஏவினான் - அந்த இந்திரசித்தன் மீது வீசி எறிந்தான்; சொரிந்த வாளிகளின் - (அந்த இந்திரசித்தன்) எய்த அம்புகளினால்; அக்கிரி - அந்த மலை; ஊழ் இலாத சிறு பூழியாய் - முறைமை இல்லாத சிறிய துகள்களாக; உக்கது - சிதறிவிட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment Aṉumaṉ, turned to a fury like the Ālakālam poison,
  2. rushed in, slapped his lofty shoulders so that all the worlds shook, closed in like thunder,
  3. and, so that all said 'he dies this instant', lifted a hill and hurled it upon him;
  4. that hill, under the arrows he poured, fell away as fine dust without shape.

What the poem says

Seeing Cukkirīvaṉ wounded, Aṉumaṉ flies into a rage as deadly as Ālakālam, the poison that rose from the churned ocean. He slaps his shoulders in challenge, which makes the worlds shake, and hurls a whole hill at Intiracittaṉ. Everyone expects the demon to die, but his arrows grind the hill to dust before it reaches him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ak kaṇattu, aṉumaṉ ālakālam eṉalāyatu ōr vekuḷi āyiṉāṉ
pukku, aṉaittu ulakamum kuluṅka nimir tōḷ puṭaittu urumupōl uṟā,
‘ik kaṇattu avaṉ iṟakkum ‘eṉpatu oru kuṉṟu eṭuttu, micai ēviṉāṉ;
ukkatu ak kiri, corinta vāḷikaḷiṉ, ūḻ ilāta ciṟu pūḻiyāy.