கம்பராமாயணம் 8125 · யுத்த 18.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று - என்று கூறி (இந்திரசித்தன்); வெஞ்சிலை கொடு - தன் கொடுமையான வில்லைக் கொண்டு; வெம்பகழி - கொடுமையான அம்புகள்; ஏழுநூறும் இருநூறும் - தொள்ளாயிரத்தை; ஏவினான் - செலுத்தினான்; குன்று நின்றனைய வீரமாருதி தன் - மலை நின்றது போன்ற தோற்றங் கொண்ட வீர அனுமன் தன்; மேனி மேல் - உடம்பின் மீது; அவை குழுக்களாய்ச் - அந்த அம்புகள் பெருங்கூட்டமாக; சென்று சென்று உருவலோடும் - மேலும் மேலும் சென்று பட்டு உருவிய அளவில்; வாள் எயிறு தின்று - அனுமன் (சினத்தால்) தன் ஒளிமிக்க பற்களைக் கடித்து; சீறி - (மேலும்) சினந்து; நின்றது ஒரு சேமவன் குன்று பறித்து எடுத்து - (அருகில்) இருந்ததாகிய ஒரு தக்க சமயத்தில் உதவ வேண்டும் என வைத்திருந்த குன்றைப் பேர்த்து எடுத்து; அவனை எய்தி - அந்த இந்திர சித்தன் முன் வந்து நின்று; நொய்தின் - எளிமையாக; இது கூறினான் - இச்சொற்களைச் சொன்னான்; அதனை அடுத்த பாடலில் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So saying, with his cruel bow he loosed seven hundred and two hundred cruel arrows;
- as they went on and on in swarms and pierced the body of heroic Māruti,
- who stood like a mountain, he gnashed his gleaming teeth and hissed in rage, tore up
- a strong hill that stood near, kept in reserve, came up to him and lightly said this.
What the poem says
Intiracittaṉ shoots nine hundred arrows into Aṉumaṉ. Standing firm like a mountain, Aṉumaṉ grinds his teeth in anger. He uproots a hill he had kept nearby for just such a moment, walks up to the demon and speaks with easy contempt. His words follow in the next verse.