கம்பராமாயணம் 8126 · யுத்த 18.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தும்பி என்று உலகின் உள்ள யாவை - யானை என்று உலகில் உள்ளவை எத்தனையோ; அவை ஏவையும் - அவையாவும்; தொகுபு - ஒன்றாகக் கூடி (இரண்டாலும்); துள்ளுதாள் - குதித்துப் பாயும் கால்களை உடைய; வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின் - கொடுஞ்சினத்தினையுடைய சிங்கம் ஒன்றின்; வலி தன்னை நின்று எளிதின் வெல்லுமோ - வலிமை தன்னை (எதிர்த்து நின்று) எளிதாக வெல்லமுடியுமோ? முடியாதல்லவா? நம்பி தம்பி - ஆடவரில் சிறந்த இராமனது திருத்தம்பியும்; எனது எம்பிரான் - எனக்கும் எங்கட்குத் தலைவனும் ஆகிய (இலக்குவன்); வரு துணைத் தரிக்கிலை நலித்தியேல் - வருமளவும் பொறுத்துக் கொள்ள முடியாது (என்னுடன் போரிட்டு) என்னை வருத்துவாய் ஆனால், இது - இம்மலை, அம்பின் முந்தி - (உனது) அம்புக்கு முன்னால்; உனது ஆவி உண்ணும் - உனது உயிரைக் குடித்து விடும்; சிலை வல் ஆண்மையால் - (உன்) வில்தொழில் வல்ல ஆண்மையின் மூலமாக; கா அடா - காப்பாற்றிக் கொள்ளடா! (என்று கூறி) அனுமன் பெருமலையை இந்திர சித்தன் மேல் எறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If all the creatures in the world called elephants were gathered together, could they
- stand and easily overcome the might of a single furious lion with leaping feet?
- If, unable to wait until my lord, the noble one's brother, comes to fight, you torment me,
- this will drink your life before your arrows can; save yourself, fellow, with your skill at the bow!'
What the poem says
Aṉumaṉ answers Intiracittaṉ's boast. All the elephants in the world together could not beat one lion. He hints that the demons are the elephants and Ilakkuvaṉ the lion. If Intiracittaṉ cannot wait for Ilakkuvaṉ and insists on fighting Aṉumaṉ, this hill will kill him before he can shoot. "Save yourself if your archery is so good!" With that he hurls the hill.