கம்பராமாயணம் 8127 · யுத்த 18.80
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செருப்பயிற்றிய - போர் (செய்து) பழக்கப்பட்ட; தடக்கை ஆளி - பெரிய கைகளை உடைய ஆளி போன்றவனாகிய அனுமன்; செலவிட்ட குன்று - (இந்திரசித்தன் மீது) செல்லும் படியாக (வீசிவிட்ட) குன்று; திசை யானையின் - திசை யானைகளின்; மருப்பை உற்ற - கொம்புகளைப் பொருந்தியுள்ள; தோள் இராவணன் - (திரண்ட) தோள்களை உடைய இராவணனது; மகன் தன் மார்பின் - மகனுடைய மார்பில்; நெடு வச்சிரப் பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என - உயர்ந்த வச்சிரத்தால் ஆனமலை மீதுபட்ட (வேறு ஒரு) மலை போல; கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் - விரைவாக ஒடிந்து துண்டுகளாகித் திசைகளில் சிதறிப் போயிற்று; நெருப்பை உற்றது ஓர் இரும்பு - நெருப்பில் பொருந்திய (பழுக்கக் காய்ந்த) இரும்பானது; கூடம் உற - சம்மட்டி (அடி) பொருந்தியதால்; நீறு பட்டது நிகர்த்ததால் - (பொடிப்) பொடியாய்ச் சிதறியதையும் (அது) ஒத்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hill sent flying by that yāḷi with great war-trained hands struck the chest of Irāvaṇaṉ's son,
- whose massive shoulders had borne the tusks of the elephants of the directions,
- and, like a mountain dashed against the great diamond mountain, it broke, shattered and flew off to every quarter;
- it was like red-hot iron under the smith's hammer, scattering as dust.
What the poem says
Aṉumaṉ's hill hits Intiracittaṉ full on the chest and shatters to pieces, as if it had struck a mountain of diamond. Intiracittaṉ is the son of Irāvaṇaṉ, whose shoulders once took the tusks of the world-elephants without harm. The hill breaks up like red-hot iron flying apart in sparks under a smith's hammer.