கம்பராமாயணம் 8128 · யுத்த 18.81

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விலங்கல் மேல் வர - (தன்) மலை போன்ற மார்பின் மேல் வருமாறு; விலங்கல் வீசிய விலங்கல் - மலை போன்ற அனுமன் வீசிய மலை; நீறு படு வேலையில் - (தன் மார்பில் பட்டு) பொடியாகிப் போன அளவில்; சலம் கை மேல் நிமிர - மாறுபாடும் (அதனால் கறுவும்) தன்னிடம் மேலும் மேலும் மிகுதிப்பட; வெஞ்சினம் திருகி - கொடிய சினம் மிகுந்து; வஞ்சன் - வஞ்சகப் பண்பு படைத்த (அந்த) இந்திரசித்தன்; மேல் நிமிர் தருக்கினான் - மேல் ஓங்கிய செருக்கு உடையவனாய், வலம் கொள் பேருலகம் - உறுதிமிக்க (இந்தப்) பெரிய உலகத்தையும்; மேருவோடு - மேரு மலையையும்; உடன் மறிக்கும் - ஒன்றாகப் பேர்த்தெடுக்க வல்ல; மாருதிதன் - அனுமனது; வாசம் நாறு அலங்கல் மார்பும் - மணம் மிக்க மாலையணிந்த மார்பும்; உயர் தோளும் - உயர்ந்த தோள்களும்; ஊடுருவ - ஊடுருவுமாறு; ஆயிரம் சரம் அழுத்தினான் - ஆயிரம் அம்புகளைச் செலுத்தினான்.

விலங்கல் என்ற சொல் மலை போன்ற மார்பு, மலை, மலை போன்ற அனுமன் என்று பொருள் பட்டு நிற்கும் நயம் காண்க. அலங்கல் மார்பு - இந்திரன் கொடுத்த பொற்றாமரை மாலை (அல்) போருக்காக அணிந்த தும்பை மாலை என்பர் வை. மு.கோ.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the mountain hurled by the mountain to fall upon the mountain was turned to dust,
  2. his hatred mounting, his fierce rage twisting, the treacherous one, swollen with towering pride,
  3. into the fragrant garlanded chest and the lofty shoulders of Māruti, who could overturn
  4. the mighty great world together with Mēru, drove a thousand arrows clean through.

What the poem says

The verse opens with a play on the word vilaṅkal, "mountain", used three times: the hill (vilaṅkal) thrown by the mountain-like Aṉumaṉ at Intiracittaṉ's mountain-like chest. When it shatters, Intiracittaṉ's fury mounts. He sends a thousand arrows right through the chest and shoulders of Aṉumaṉ, whose strength could overturn the earth and Mount Mēru together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vilaṅkalmēl vara vilaṅkal vīciya vilaṅkal nīṟu paṭu vēlaiyil,
calam kaimēl nimira, veñ ciṉam tiruki, vañcaṉ mēl nimir tarukkiṉāṉ,
valam koḷ pēr ulakam mēruvōṭu uṭaṉ maṟikkum mārutitaṉ vācam nāṟu
alaṅkal mārpum uyar tōḷum ūṭuruva, āyiram caram aḻuttiṉāṉ.