கம்பராமாயணம் 8129 · யுத்த 18.82

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடுபோய் உருவ, ஆடகக்
குன்று காலெறிய மெய்குலைந்து இடை குலுங்க நின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர வாரி சோரவரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெம் கண் அடல் நீலன் வந்து இடை, நெருக்கினான்.

பொருள் · Meaning in Tamil

ஒன்று போல்வன ஓராயிரம் பகழி - (இந்திரசித்தன் எய்த) ஒன்றை ஒன்று ஒத்தனவாகிய ஓராயிரம் அம்புகள்; ஊடு போய் உருவ - (தன்) மார்பின் இடையில் புகுந்து போய் ஊடுருவ; ஆடகக் குன்று - பொன்மயமான மேருமலை; கால்குடைய - காற்றுத் தாக்க; மேல் உயர்ந்து - மேல் உயர்ந்து; இடை குலுங்க நின்றனைய கொள்கையான் - உள் இடம் (கலகலத்து வலிமை இழந்தது) போன்ற தன்மையுடையவனாகி; மன்றல் நாறு தடமேனி மேல் - மணம் வீசுகின்ற பெரிய உடம்பின் மீது; உதிர வாரி சோர வரும் மாருதி - இரத்தக் கடல் பெருகப் பெற்றவனாகிய அனுமன்; நின்று தேறும் அளவின் கண் - (களைத்து) நின்று (ஏது செய்யலாம் என்று) எண்ணும் பொழுது; வெங்கண் அடல் நீலன் - கொடிய கண்களை உடைய கொல்லும் தன்மை உள்ள நீலன் என்பவன்; வந்து இடை நெருக்கினான் - (எதிரில்) வந்து (அந்த இந்திரசித்தனை) வருத்தத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a thousand arrows, each like the other, went through and pierced him, he stood
  2. like the golden mountain when the wind bores at its base, towering yet shaken at its core;
  3. and while Māruti, a flood of blood streaming down his great fragrant body,
  4. stood trying to recover, fierce-eyed, mighty Nīlaṉ came between them and pressed the attack.

What the poem says

Pierced by a thousand arrows, Aṉumaṉ stands tall but shaken, like golden Mount Mēru when a storm wind hits its base. As he stands bleeding and gathering himself, the monkey general Nīlaṉ steps in to give him time and takes on Intiracittaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟu pōlvaṉa ōrāyiram pakaḻi ūṭu pōy uruva, āṭakak
kuṉṟu kāl kuṭaiya mēl uyarntu iṭai kuluṅka niṉṟaṉaiya koḷkaiyāṉ,
maṉṟal nāṟu taṭa mēṉimēl utira vāri cōra varum māruti,
niṉṟu tēṟum aḷaviṉkaṇ, veṅ kaṇ aṭal nīlaṉ vantu iṭai, nerukkiṉāṉ.