கம்பராமாயணம் 8130 · யுத்த 18.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீலன் - (குரங்குப் படைத்தலைவனாகிய) நீலன்; நின்றது - தன்னருகில் இருந்ததாகிய; ஒரு நீல மால் வரை - ஒரு நீல நிறமுடைய பெரிய மலையை; நெடுந் தடக்கையின் இடந்து - (தன்) நீண்ட (பெரிய) கைகளால் பெயர்த்து எடுத்து; நேர் மேல் எழுந்து - நேராக மேலே (ஆகாயத்தில்) உயர்ந்து; எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு - நெருப்பு (நேராக) ஆகாயத்தில் செல்வது போன்றதொரு வெப்பத்தோடு; வர வீசலும் - (இந்திரசித்தன் மேல்) நேராக வருமாறு வீசி எறிந்தவுடன்; நெடிய வில்லினான் - பெரிய வில்லை ஏந்தியவனாகிய இந்திரசித்தன்; அந்தகன் எறிந்தது சூலம் அன்னது - இயமனால் எறியப்பட்ட சூலத்தைப் போன்ற அந்த மலை; துணிந்து சிந்த - துண்டுபட்டுச் சிதறும் படியாக; இடை சொல்லுறும் காலம் ஒன்றும் அறியாமல் - இடையில் கணக்கிட்டுச் சொல்லும் காலம் (உண்டு என) அறியாதபடி, அம்பு கொடு கல்லினான் - (தன்) அம்புகளால் (விரைவாக) அழித்து விட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Nīlaṉ tore up with his long, great hands a vast blue mountain that stood near,
- rose straight up, and hurled it so that it came on with the heat of fire shooting into the sky;
- like a trident hurled by Death, it was cut to pieces and scattered, and with no
- interval one could even name, he of the long bow destroyed it with his arrows.
What the poem says
Nīlaṉ uproots a dark mountain, flies up and hurls it down at Intiracittaṉ. It comes blazing like fire, as deadly as the trident of Yama, god of death. Intiracittaṉ shoots it to pieces in a moment too short to measure.