கம்பராமாயணம் 8132 · யுத்த 18.85

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மேரு, மேரு ‘என, ‘அல்ல, அல்ல ‘என வேரினோடு நெடுவெற்பு எலாம்,
மாரின் மேலும் உயர்தோளின் மேலும் வர, வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கைநிற்க? எதிர் செல்லுமே? கடிது செல்லினும்
பேருமே? கொடிய வாளியால் முறி பெறுக்கலாவகை நுறுக்கினான்.

பொருள் · Meaning in Tamil

மேரு மேரு என - (சிலர் இது) மேரு மலையே மேரு மலையே (என்றும்); அல்ல அல்ல என - (வேறு சிலர் எண்ணி இது) மேருவன்று மேருவன்று (வேறுமலை) என்றும் சொல்லும்படியாக; நெடு வெற்பு எலாம் - உயர்ந்த மலைகளை எல்லாம்; வேரினொடு - வேரோடு (பிடுங்கி எடுத்து); மார்பின் மேலும் - (இந்திரசித்தனது) மார்பின் மீதும்; உயர் தோளின் மேலும் - உயர்ந்த தோள்களின் மீதும்; உற - பொருந்தித் (தாக்கும்படியாக); வாலி காதலன் வழங்கினான் - வாலியின் அன்பு மகனாகிய அங்கதன் வீசி எறிந்தான்; தனுக்கை நிற்க - (இந்திரசித்தன்) கையில் வில் இருக்கையில்; அவை சேருமே - அம்மலைகள் (அவனுடலில்) சென்று பட்டு நிற்குமோ? எதிர் செல்லுமே - (அவனது) எதிரில்தான் செல்ல முடியுமோ? கடிது செல்லினும் பேருமே - (அம்மலைகள்) விரைவாக அவன் எதிரில் சென்றாலும் (அம்புக்கு இலக்கு ஆகாமல்) தவறுமோ? கொடிய வாளியால் - (அந்த இந்திரசித்தன்) தன் கொடுமையான அம்புகளால்; முறி பெறுக்கலாவகை - துண்டம் என்ற தன்மையையும் பெறாதபடி; நுறுக்கினான் - பொடிப்பொடியாக நொறுங்கச் செய்து விட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Crying 'Mēru! Mēru!', 'No, it is not!', tall mountains, roots and all,
  2. Vālī's son hurled, to strike upon his chest and upon his shoulders;
  3. would they reach him while the bow was in his hand? Could they even come near? And if they came swiftly,
  4. would they escape? With cruel arrows he ground them so fine that not a fragment remained.

What the poem says

Aṅkataṉ, Vālī's son, attacks next. He hurls mountains uprooted whole, so huge that onlookers argue whether each one is Mount Mēru itself. The poet asks, could any of them reach Intiracittaṉ while he holds his bow? The demon grinds every one to powder before it can touch him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘mēru, mēru ‘eṉa, ‘alla, alla ‘eṉa vēriṉōṭu neṭu veṟpu elām,
mārpiṉmēlum uṟa tōḷiṉmēlum uṟa, vāli kātalaṉ vaḻaṅkiṉāṉ;
cērumē avai, taṉuk kai niṟka? etir cellumē? kaṭitu celliṉum
pērumē? koṭiya vāḷiyāl muṟi peṟukkalāvakai nuṟukkiṉāṉ.