கம்பராமாயணம் 8133 · யுத்த 18.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெற்றிமேலும் - (அங்கதனது) நெற்றியின் மீதும்; உயர் தோளின் மேலும் - உயர்ந்த தோள்களின் மீதும்; நெடு மார்பின் மேலும் - பரந்த மார்பின் மீதும்; நிமிர் தாளினும் - நீண்ட கால்களின் மீதும்; புற்றினூடு நுழை நாகம் அன்ன - புற்றில் நுழைகின்ற பாம்பினைப் போன்ற; புகை வேக வாளிகள் புகப்புக - புகையொடு கூடிய (இந்திரசித்தன்) விரைவான அம்புகள் பலவாறு பாய்தலினால்; தெற்றி - (அங்கதன்) தடுமாறி; வாள் எயிறு தின்று - ஒளியுள்ள பற்களைக் கடித்து; கைத்துணை பிசைந்து - இரு கைகளையும் பிசைந்து; கண்கள் எரி தீ உக - கண்களில் இருந்து எரிகின்ற தீப்பொறி சிதற; வற்றி - வாடி; ஓடு உதிர வாரி சோர்வுற - (உடம்பில் இருந்து) வெளியே ஓடி வருகிற குருதிக் கடல் (மிகுதியும் பெருகுதலால்); மயங்கினான் - மயங்கியவனாகி; நிலம் முயங்கினான் - நிலத்தில் விழுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On his forehead, on his lofty shoulders, on his broad chest, on his long legs,
- like serpents slipping into an anthill, the swift, smoking arrows went in and in;
- staggering, he gnashed his gleaming teeth and wrung his two hands, his eyes shedding burning fire;
- drained, as a flood of blood ran out, he swooned and fell, embracing the earth.
What the poem says
Intiracittaṉ's smoking arrows sink into Aṅkataṉ's forehead, shoulders, chest and legs like snakes sliding into their holes. Aṅkataṉ staggers, grinds his teeth and wrings his hands, eyes blazing with fury, but loses so much blood that he faints and falls to the ground.