கம்பராமாயணம் 8134 · யுத்த 18.87
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மற்றை வீரர்கள்தம் - (தன்னொடு தனிப்போர் செய்த சுக்கிரீவன், அனுமன் நீலன் அங்கதன் தவிரப்) பிற வானர வீரர்கள் தம்; மார்பின் மேலும் - மார்பின் மேலும்; உயர் தோளின் மேலும் - உயர்ந்த தோள்களின் மேலும்; மழை மாரி போல் - மழைத்தாரைகள் போல; கொற்ற வெங்கணை உலக்க - (இந்திரசித்தனால்) எய்யப்பட்ட வெற்றி பொருந்திய கொடிய அம்புகள் (உடலில் புகுந்து) வருத்தவும்; எய்தவை குளிப்பநின்று - (அவ்வாறு) எய்தவை (உடம்பில்) மூழ்கி நின்றதனால்; உடல் குலுங்கினார் - குரங்கு வீரர்கள் உடல் நடுங்கினார்கள்; பெரும்பதாதி - (அதனால்) பெரிய காலாட் படையாகிய குரங்குப்படை; இற்று அவிந்தன - உயிர் ஒழிந்து இறந்துபட்டன; உயிர் உள்ள எங்கணும் இரிந்த - உயிர் பிழைத்தவைகள் எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடின; அப்பெற்றி கண்டு - அந்தத் தன்மையைக் கண்டு; இளைய வள்ளல் - இளைய வள்ளலாகிய இலக்குவன்; ஒள் எரி பிறந்த கண்ணன் - ஒளியுடைய தீப்பொறி பறக்கும் கண்களை உடையவனாய்; இவை பேசினான் - இவற்றைச் சொல்லுபவன் ஆனான்; (அடுத்த பாடலில் காண்க)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Upon the chests and lofty shoulders of the other warriors, like a downpour of rain,
- the victorious cruel arrows fell and tormented them; they stood with the shafts sunk deep in them, bodies shaking;
- the great infantry broke and perished; all who still had life fled every way;
- seeing that state, the generous younger prince, his eyes shooting bright fire, spoke these words.
What the poem says
With the great monkey champions down, Intiracittaṉ's arrows rain on the rest of the army. The foot soldiers die in masses and the survivors scatter. Ilakkuvaṉ, who had held back on Vīṭaṇaṉ's advice, watches this happen, and his eyes blaze with anger. His words follow in the next verse.