கம்பராமாயணம் 8136 · யுத்த 18.89
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(வீடணன்) ஐய - ஐயனே; ஈது அன்னதேயால் - (நீ கூறிய) ஈது அத்தன்மையதாகிய உண்மையேயாகும்; ஆயிர கோடித் தேவர் எய்தினர் - (முன்பு ஒரு காலத்தில் இவனோடு போர் செய்வதற்காக) பல கோடித் தேவர்கள் வந்தார்கள்; எய்தினார்கள் - (அவ்வாறு) வந்தவர்களெல்லாரும்; ஈடுபட்டு இரிந்தது அல்லால் - வலிமை கெட்டு ஓடியது அல்லாமல்; இவனை ஒன்றும் செய்திலர் - இந்த இந்திரசித்தனை எதுவும் செய்ய முடியாதவர்களானார்கள்; நீ இது தீர்ப்பின் அல்லால் - நீ (இவனால் உலகுக்கு ஏற்பட்ட) துன்பத்தை நீக்கினால் அல்லாமல், இவ் உலகினுக்கு - இந்த உலகத்துக்கும்; உயிரோடு - (இங்குள்ள) உயிருள்ள பொருள்களுக்கும்; உய்திறன் வேறு உண்டோ என்றான் - உய்யும் வழிவகை வேறு (ஏதேனும்) உண்டோ என்றான். (ஒரு வழியும் இல்லை என்றபடி)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Lord, it is just as you say; thousands of crores of gods
- once came against him; those who came only lost their strength and fled;
- they could do nothing to him at all; unless you put an end to this,
- is there any other way of escape for this world and the living beings in it?' he said.
What the poem says
Vīṭaṇaṉ agrees with Ilakkuvaṉ. Countless gods once attacked Intiracittaṉ and could do nothing but flee. No one but Ilakkuvaṉ can end this menace, and unless he does, the world and every living thing in it are doomed. This is Vīṭaṇaṉ's way of saying that the time has come for Ilakkuvaṉ himself to fight.