கம்பராமாயணம் 8137 · யுத்த 18.90

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்பது சொல்லக் கேட்ட, இந்திர வில்லினோடும்
பொன் பொரு மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி, ‘இவன் கொலாம், பரதன் முன்னோன்
தன் பெருந் தம்பி? ‘என்றான் ஆம் எனச் சாரன் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

என்பது - என்ற சொற்களை; வீடணன் சொல்லக் கேட்ட - சொல்லக் கேட்ட; பொன் புரை மேகம் ஒன்று - பொன்னை ஒத்த மேகம் ஒன்று; இந்திர வில்லினோடும் - இந்திரவில்லினோடும்; வருவது போல்கின்றானை - வருவது போல் வருகின்றவனும்; முன்பனை - வலிமை உடையவனும் ஆகிய இலக்குவனை; முன்பு நோக்கி - (இந்திரசித்து) தன் முன்பு பார்த்து; இவன் கொலாம் பரதன் முன்னோன் தன் பெருந்தம்பி என்றான் - இவன் போலும் பரதனுக்கு முன்னோன் ஆகிய இராமன்தன் துணைத்தம்பி என்று கேட்டான்; சாரன் ஆம் எனச் சொன்னான் - (ஒற்றன் ஆகிய) சாரன் (அதற்கு) ஆமாம் என்று சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing these words spoken, the mighty one, who came on like a golden cloud
  2. bearing Indra's bow, Intiracittaṉ saw before him and asked,
  3. 'Is this, then, the great younger brother of him who is Paratan's elder?'
  4. And the spy Cāraṉ said, 'Yes.'

What the poem says

Ilakkuvaṉ steps forward to fight. He looks like a golden cloud carrying a rainbow, Indra's bow, in its arc. Intiracittaṉ sees him and asks his spy Cāraṉ whether this is the brother of Irāmaṉ, Paratan's elder brother. Cāraṉ confirms it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉpatu collak kēṭṭa, intiravilliṉōṭum
poṉ purai mēkam oṉṟu varuvatu pōlkiṉṟāṉai,
muṉpaṉai, muṉpu nōkki, ‘ivaṉkolām, parataṉ muṉṉōṉ
taṉ perun tampi? ‘eṉṟāṉ ām eṉac cāraṉ coṉṉāṉ.