கம்பராமாயணம் 8138 · யுத்த 18.91

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

தீயவன் - கொடியவன் ஆகிய இந்திரசித்தன்; இளவல் தன் மேல் - இளவலாகிய (இலக்குவன்) தன் மேல்; செல்வதன் முன்னம் - (போரிடச்) செல்லுவதற்கு முன்பாக; செல்க என்று - (நீங்கள் போரிடச்) செல்லுங்கள் என்று; இராக்கதத் தலைவர் - அரக்கர் (படைத்) தலைவர்கள்; ஒருவர் இன்றி ஏயினர் - ஒரு வீரரும் மீதியில்லாமல் (எல்லோரையும்) (இலக்குவனுடன் போர் செய்ய) ஏவினார்கள்; எங்கள் நாயகன் மகனைக் கொன்றாய் - (அவ்வாறு ஏவப்பட்ட அரக்க வீரர்கள்) எங்கள் தலைவனாகிய இராவணனது மகனாகிய அதிகாயனைக் கொன்றவனே; நாங்கள் காண நண்ணினை - (நீ) நாங்கள் (கண் எதிரில்) காணுமாறு (வந்து) நெருங்கினை; இனி போய் உய்வது எங்கே - இனிமேல் (நீ) போய்ப் பிழைப்பது எவ்வாறு; என்று - என்று கூறி; எரி விழித்துப் புக்கார் - நெருப்புப் போல் (கடுமையாக) விழித்துப் போர் செய்ய நெருங்கினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the wicked one could go against the younger prince himself, the demon captains,
  2. ordered 'Go!' to a man, cried,
  3. 'You killed our lord's son! You have come near, where we can see you;
  4. where can you go now and escape?', and rushed in, glaring fire.

What the poem says

Before Intiracittaṉ engages Ilakkuvaṉ himself, he sends his whole army against him. The demon officers charge at the slayer of their king's son Atikāyaṉ with blazing eyes. Now that he is right in front of them, they shout, he has nowhere to run.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīyavaṉ iḷavaltaṉmēl celvataṉ muṉṉam, ‘celka! ‘eṉṟu
ēyiṉar oruvar iṉṟi, irākkatat talaivar, ‘eṅkaḷ
nāyakaṉ makaṉaik koṉṟāy! naṇṇiṉai nāṅkaḷ kāṇa;
pōy iṉi uyvatu eṅkē? ‘ eṉṟu, eri viḻittup pukkār.