கம்பராமாயணம் 8140 · யுத்த 18.93

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அதிர்ந்தன உலகம் ஏழும்; அனல் பொறி அசனி என்னப்
பிதிர்ந்தன; மலையும் பாரும் பிளந்தன; பிணத்தின் மேன்மேல்
உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது கொடிய வெம்போர்.

பொருள் · Meaning in Tamil

உலகம் ஏழும் அதிர்ந்தன - (இலக்குவன் எய்த அம்புகளினால்) ஏழு உலகங்களும் அதிர்ச்சி அடைந்தன; அசனி என்ன அனற்பொறி பிதிர்ந்தன - இடியேறு என்று கூறும் படியாகத் தீப்பொறிகள் சிதறின; மலையும் பாரும் பிளந்தன - அதனால் மலைகளும் நிலமும் பிளந்தன; பிணத்தின் தலைகள் - போரில் இறந்து பிணமாகிப் போன வீரர்களுடைய தலைகள்; குன்றத்து உதிர்ந்தன - மலை போல் நிலத்தில் (அறுபட்டு) உதிர்ந்தன; உதிர நீத்தம் மண்டி ஓடின - இரத்த வெள்ளம் நெருங்கி ஓடியது; அமரர் கைகள் விதிர்ந்தன - தேவர்களுடைய கைகள் நடுங்கின; கொடிய வெம் போர் விளைந்தது - (இவ்வாறு) மிகக் கொடிய போர் மூண்டது.

இப்பாடல் போரின் மிகக் கொடுமையை விளக்குவதே தொடர்பு உயர்வு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All seven worlds shook; sparks of fire like thunderbolts
  2. flew; mountains and earth split apart; in hills of corpses
  3. heads came tumbling down; floods of blood ran thronging;
  4. the hands of the gods trembled; a cruel and fierce battle raged.

What the poem says

The fury of Ilakkuvaṉ's onslaught. The seven worlds shake, sparks fly like thunderbolts, and mountains and the earth crack open. Severed heads pile up in mounds, blood runs in floods, and even the gods tremble as they watch. The commentary notes the verse is deliberate exaggeration to convey how terrible the battle is.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1atirntaṉa ulakam ēḻum; aṉaṟ poṟi acaṉi eṉṉap
pitirntaṉa; malaiyum pārum piḷantaṉa; piṇattiṉ kuṉṟattu
utirntaṉa, talaikaḷ; maṇṭi ōṭiṉa utira nīttam
vitirntaṉa, amarar kaikaḷ; viḷaintatu koṭiya vempōr.