கம்பராமாயணம் 8142 · யுத்த 18.95

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலக்கின்றார் உலக்கின்றாரை - (இலக்குவனது அம்பு பட்டு) மிகுதியாக இறக்கின்ற அரக்கர்களை; எண்ணுவான் உற்ற விண்ணோர் - எண்ணுவதற்காக வந்து பொருந்திய தேவர்கள்; கலக்குறு கண்ணர் ஆகி - கலக்கம் மிக்க கண்பார்வை உடையவர்களாய்; கடையுறக் காணல் ஆற்றார் - முடிவு வரையில் (எண்ணி) முடிவு காண மாட்டாதவர் ஆயினார்; விலக்க அரும் பகழி மாரி - பிறரால் விலக்குதற்கு அரிய (இலக்குவனது) அம்பு மழை; விளைக்கின்ற விளைவை உன்னி - (போர்க்களத்தில்) உண்டாக்குகிற விளைவுகளை (மனதில்) நினைத்து; எழு மழை பயின்றது - ஏழு மேகங்களும் (இடைவிடாது) பொழியும் தன்மையைக் கற்றது, இலக்குவன் சிலை கொடேகொல் - இலக்குவனது வில்லை (முன்மாதிரியாகக்) கொண்டுதானே; என்றார் - என்று வியந்து கூறினார்கள்.

எழு மழை - ஏழு மேகங்கள்; அவையாவன சம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They kept on dying; the gods who had come to count the dying,
  2. their eyes swimming, could not carry the count through to the end;
  3. pondering what that rain of unstoppable arrows was bringing about,
  4. they said, 'Was it from Ilakkuvaṉ's bow that the seven clouds learned to rain?'

What the poem says

The gods try to count the demons Ilakkuvaṉ is killing but give up, dizzy, before they can finish. They wonder whether the seven great clouds of myth, which pour down endless rain at the end of the world, learned to rain from Ilakkuvaṉ's bow. The commentary lists the seven clouds by name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakkiṉṟār; ulakkiṉṟārai eṇṇuvāṉ uṟṟa viṇṇōr
kalakkuṟu kaṇṇar āki, kaṭaiyuṟak kāṇal āṟṟār
vilakka arum pakaḻi māri viḷaikkiṉṟa viḷaivai uṉṉi
ilakkuvaṉ cilaiyoṭē kol, eḻu maḻai payiṉṟatu eṉṟār.