கம்பராமாயணம் 8143 · யுத்த 18.96

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓளி ஒண் கணைகள் தோறும் உந்தின வேழம், ஒற்றை
வாளியின் தலைய பாரின் மறிவன, மலையில் சூழ்ந்த;
ஆளியின் துப்பின் வீரர் பொருகளத்து, ஆர்த்த வாளித்
தூளியின் தொகைய, வள்ளல் சுடுகணைத் தொகையும் அம்மா!

பொருள் · Meaning in Tamil

ஒளி ஒண் கணைகள் தோறும் - (இலக்குவன் செலுத்திய) வரிசையான ஒளி பொருந்திய அம்புகள் (பாயும்) தோறும், உந்திய வேழம் - (அவற்றால்) தாக்கி வீழ்த்தப்பட்ட யானைகள்; ஒற்றை வாளியின் தலைய - (ஒவ்வொன்றும்) ஒவ்வொரு அம்பின் முனையை உடையவாய்; பாரில் மறிவன - நிலத்தில் விழுந்து இறப்பன; மலையின் சூழ்ந்த - மலைகளைப் போலப் (போர்க்களம்) எங்கும் கிடந்தன; ஆளியின் துப்பின் வீரர் - சிங்கம் போன்ற வலிமை உடைய வீரர்கள்; பொருகளத்து - (போர் செய்கின்ற) போர்க்களத்தில்; வள்ளல் சுடுகணைத் தொகையும் - வள்ளலாகிய இலக்குவன் (செலுத்திய) கொடுந்தன்மை உள்ள அம்புகளின் எண்ணிக்கையும்; ஆர்த்த ஆழித் தூளியின் தொகைய அம்மா - ஒலிக்கிற கடலின்கண் உள்ள மணல்களின் தொகையுடையன.

ஒளி - வரிசை. ஆழித் தூளி - கடலில் உள்ள மணல்கள். அம்மா - மெல்லிடைச் சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With every row of gleaming arrows, the elephants he struck down, each one
  2. bearing the head of a single shaft, rolled over on the ground and lay about like hills;
  3. on that field where warriors strong as lions fought, the count of the generous one's burning arrows
  4. matched the count of the sands of the roaring sea!

What the poem says

Ilakkuvaṉ is fighting the army that has come out with Intiracittu. Every shaft he looses finds a mark: each elephant falls carrying one arrowhead, and the felled beasts lie across the field like a range of hills.

The poet then measures his arrows by the sands of the ocean, a stock image for the uncountable. Ilakkuvaṉ is called "the generous one", the liberal-handed hero, even as he deals death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oḷi oṇ kaṇaikaḷ tōṟum untiya vēḻam, oṟṟai
vāḷiyiṉ talaiya pāriṉ maṟivaṉa, malaiyil cūḻnta;
āḷiyiṉ tuppiṉ vīrar poru kaḷattu, ārtta āḻit
tūḷiyiṉ tokaiya, vaḷḷal cuṭu kaṇait tokaiyum ammā!