கம்பராமாயணம் 8147 · யுத்த 18.100

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வற்றிய கடலுள் நின்ற மலை என - (தண்ணீர்) வற்றிய கடலுக்கு நடுவில் நின்ற மலை போல; மருங்கின் யாரும் சுற்றினர் இன்றி - பக்கத்தில் எவரும் சூழ்ந்து நிற்பவர் இன்றி; தோன்றும் - (தனியனாய்த்) தோன்றுகிற, தசமுகன் தோன்றல் - பத்துத் தலைகளை உடைய இராவணனது மகனாகிய இந்திரசித்தன்; துள்ளி - மனந்துடித்து; தெற்றின புருவத்தோன் - சினத்தால் மேல் ஏறிய புருவத்தை உடையவனாய்; தன் மனம் எனச் செல்லும் தேரான் - தன் மனம் போல் (வேகமாகச்) செல்லுகிற தேரின் (மேல்) ஏறியவனாகி; இளைய கோவை உற்றனன் - இளைய தலைவனாகிய இலக்குவனை நெருங்கினான்; அனுமனும் - (அந்த நேரத்தில்) அனுமனும்; உடன் வந்து உற்றான் - உடனே (இலக்குவன் பக்கலில்) வந்து சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a mountain standing in a sea that has run dry, with no one at his side
  2. to surround him, the son of the ten-faced one stood out; quivering,
  3. his brows knotted in anger, on a chariot that ran as swift as his own mind,
  4. he came close to the younger prince; and Aṉumaṉ too came up beside him.

What the poem says

Intiracittu, son of the ten-headed Irāvaṇaṉ, now stands alone, his army destroyed around him. He is like a mountain left exposed when the sea that surrounded it has dried up.

Seething, brows drawn up in rage, he drives his chariot, swift as thought, straight at Ilakkuvaṉ, the younger prince. At that moment Aṉumaṉ also arrives at Ilakkuvaṉ's side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṟṟiya kaṭaluḷ niṉṟa malai eṉa, maruṅkiṉ yārum
cuṟṟiṉar iṉṟi, tōṉṟum tacamukaṉ tōṉṟal, tuḷḷit
teṟṟiṉa puruvattōṉ taṉ maṉam eṉac cellum tērāṉ,
uṟṟaṉaṉ, iḷaiya kōvai; aṉumaṉum uṭaṉ vantu uṟṟāṉ.