கம்பராமாயணம் 8148 · யுத்த 18.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய. தோளின் மேல் ஆதி - (இலக்குவனை நெருங்கிய அனுமன் அவனைப் பார்த்து) தலைவனே! (நீ என் தோளின் மீது ஏறிக்கொள்ளுவாய்; என்று அடி தொழுது நின்றான் - (அவனது) கால்களைத் தொழுது நின்றான்; ஆளி போல் மொய்ம்பினானும் - சிங்கம் போன்ற வலிமை உடையவனாகிய (இலக்குவனும்); ஏறினன் - (அதை ஏற்று அவனது தோளின் மீது) ஏறினான்; அமரர் ஆர்த்தார் - (அதைக்கண்டு மகிழ்ந்து) தேவர்கள் பேரொலி செய்தார்கள்; மழையின் மேல் மழை வந்தன்னார் - ஒரு மேகத்தின் மீது மற்றொரு மேகம் (போர் செய்ய) வந்ததை ஒத்தவர்களாகிய (இலக்குவன் இந்திரசித்தன் ஆகிய இருவரும்); காளியே அனைய காலன் - காளி போன்ற கருநிறம் உடைய யமனது; கொலை அன - கொலைக்கருவி போன்ற; கனலின் வெய்ய - நெருப்பைக் காட்டிலும் கொடுமையான; வாளி மேல் வாளி தூர்த்தார் - அம்புகளின் மீது அம்புகளாக (ஒருவர் மீது ஒருவர்) எய்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Lord, mount upon my shoulders!" he said, and stood bowing at his feet;
- he of lion-like strength climbed up, and the gods roared;
- like Kāḷi-dark Death's weapons of slaughter, fiercer than fire,
- they heaped arrow on arrow, like cloud coming upon cloud.
What the poem says
Aṉumaṉ bows at Ilakkuvaṉ's feet and offers his shoulders so the prince can meet the chariot-borne Intiracittu on equal terms. Ilakkuvaṉ mounts, and the watching gods cheer.
The two champions then shower each other with arrows, deadly as the instruments of Death, who is dark as the goddess Kāḷi. Facing each other, they are like one storm cloud rising against another.