கம்பராமாயணம் 815 · பால 13.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகு சில் இடமென - உலகம் சிறிய இடத்தையுடையது என்று சொல்லுமாறு; செறிந்த தேர்கள் தாம் - நெருங்கின தேர்கள்; வேந்தரால் - (தம்மேல் ஏறியுள்ள) மன்னர்களால்; புல்லிடு சுடரென - பொருந்திய கதிரவனைப் போல; பொலிந்த - விளங்கின; வேழம் - யானைகள்; எல்லிடு கதிர்மணி - சூரியனின் கதிர்கள் போல ஒளிவிடும் இரத்தினங்கள்; எறிக்கும் ஓடையால் - இழைத்த முகபடாம் அணிந்திருப்பதால்; வில் இடும் முகிலென - வானவில் இடப்பட்ட மேகம்போல; பொலிந்த - விளங்கின.
தேர் மேல் ஏறியுள்ள மன்னவர்க்குத் தேர்மேல் விளங்கும் சூரியனும், இரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட நெற்றிப் பட்டம் அணிந்த யானைகளுக்கு இந்திர வில்லோடு கூடிய மேகங்களும் உவமையாகும். தேர் உதயமலையாகவும், வேந்தர்கள் சூரியர்களாகவும், யானை முகிலாகவும், ஓடை மின்னலாகவும் உவமை கொள்ளத்தக்கன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chariots, packed so close that the world seemed a little place,
- shone with the kings upon them like blazing suns;
- and the elephants, their face-plates flashing gems bright as sunbeams,
- shone like clouds that bear a rainbow.
What the poem says
The army's splendour: chariots crowd so thickly that the wide world seems small, and the kings riding in them blaze like suns on their rising mountain.
The elephants wear jewelled plates on their foreheads, and with their dark bulk and the flashing gems they look like rain clouds with a rainbow across them.