கம்பராமாயணம் 816 · பால 13.12

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கால் விரிந்து எழு குடை, கணக்கு இல் ஓதிமம்
பால் விரிந்தது எனப், பறப்ப போன்றன ;
மேல் விரிந்து எழு கொடிப் படலை, விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றும் ஆல்.

பொருள் · Meaning in Tamil

கால் விரிந்து - (அச்சேனைகளின் இடையே பிடிக்கக் கூடிய) காம்பிலிருந்து விரிந்து; எழுகுடை - எழுந்துள்ள வெண் குடைகள்; கணக்கு இல் ஓதிமம் - எண்ணில்லாத அன்னப் பறவைகள்; பால் விரிந்து - பால் போன்ற தம் வெண் சிறகுகளைப் பரப்பி; விண் - வானத்தில்; பறப்ப - பறப்பன; போன்றன - போன்றன; மேல் விரிந்து - வானத்தில் விரிந்து; எழு கொடிப் படலை - எழுகின்ற கொடிகளின் கூட்டம்; விண் எலாம் - விண் முழுவதும்; தோல் உரிந்து - தோல் உரியப் பெற்று; உகுவன போன்று - சிந்துவன போன்று; தோன்றும் - தோன்றும்.

சேனைகளின் இடையே பல வெண்ணிறக் குடைகள் பிடிக்கப் படுபவை, பல அன்னப் பறவைகள் தம்முடைய வெண்மையான சிறகுகளை விரித்து வானத்தில் பறந்து போவதையும், வெண்கொடி ஆடுபவை, வானம் தோலுரிக்க அவை அங்கிருந்து சிந்துவனவற்றையும் ஒத்துள்ளன என்பார் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The parasols opening up from their staffs looked like
  2. countless swans spreading their milk-white wings and flying here and there;
  3. and the mass of banners rising and spreading above appeared
  4. as if the whole sky were peeling and shedding its skin.

What the poem says

Above the marching army white parasols open on their poles like flocks of swans spreading their wings, and the countless white banners streaming overhead make it look as though the sky itself is shedding its skin in strips.

Both images imagine fanciful causes for what is seen, the figure Tamil poetics calls taṟkuṟippēṟṟam.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl virintu eḻu kuṭai, kaṇakku il ōtimam
pāl virintu iṭai iṭai, paṟappa pōṉṟaṉa;
mēl virintu eḻu koṭip paṭalai, viṇ elām
tōl urintu ukuvaṉa pōṉṟu tōṉṟumāl.