கம்பராமாயணம் 8151 · யுத்த 18.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரி இனம் பூண்ட தேரும் - சிங்கக் கூட்டங்கள் பூட்டப்பட்ட (இந்திரசித்தனது) தேரும்; அனுமனும் - இலக்குவனது (ஊர்தியாகிய) அனுமனும்; அனந்தசாரி புரிதலின் - பலப்பலவாகச் சாரி சுழன்று வருதலால்; இலங்கை ஊரும் திரிந்தது - இலங்கை நகரமும் சுழலல் உற்றது; எரிகணைப் படலம் மூட - (இருவரும் ஒருவர் மேல் ஒருவர் எய்த) எரியும் தன்மை உள்ள அம்புகளின் கூட்டம் மூடிக்கொண்டதனால்; இலர் உளர் என்னும் தன்மை - (இலக்குவன், இந்திரசித்து என்ற அவ்விருவரும்) இலரோ உளரோ என்னும் தன்மையை; புலவரேயும் தெரிகிலர் - (அறியும் தன்மை உள்ள) தேவர்களும் அறிய மாட்டாதவர் ஆயினர்; திசைகள் எல்லாம் செவிடு செல்லக் கிழிந்தன - எல்லாத் திசைகளும் (திசைகளில் உள்ள உயிரினங்கள் எல்லாம்) செவிடு பட்டுப் பிளவு பட்டன.
அனந்த - பலப்பல. சாரி - இடவலமாகச் சுழல்தல். இது வலசாரி, இடசாரி, மண்டலம், பவுரி என நான்கு வகைப்படும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the chariot yoked with a pride of lions and Aṉumaṉ wheeled in countless circling passes,
- the city of Ilaṅkai itself seemed to spin; even the wise gods,
- with a canopy of fiery arrows covering everything, could not tell
- whether the two were there or not; all the quarters were rent, and deafness spread.
What the poem says
Intiracittu's chariot, drawn by lions, and Aṉumaṉ carrying Ilakkuvaṉ manoeuvre round each other in circling movements; the commentary notes that such wheeling (cāri) was a formal technique of combat with several named kinds.
The arrows the two exchange form a roof of fire so dense that the gods above cannot see whether either fighter is still alive, and the din tears the quarters apart and deafens every creature in them.