கம்பராமாயணம் 8152 · யுத்த 18.105

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நாண் பொரு வரிவில் செங்கை, நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு இலை அவதி; மானம்
சேண் பெரிது ‘என்று சென்ற தேவரும், ‘இருவர் செய்கை
காண்பு அரிது ‘என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ!

பொருள் · Meaning in Tamil

நாண் பொரு வரிவில் - நாண் பொருந்திய கட்டமைந்த வில்லினது; நாம நூல் நவின்ற செங்கை கல்வி - புகழ் பொருந்திய நூலை (வில் ஆற்றலைத்) தமது சிவந்த கைகளால் (இவ்விருவரும் கற்ற) கல்வியின்; மாண்பு ஒரு வகையிற்று அன்று - பெருமை ஒருவகைப் பட்டது அன்று; வலிக்குஇலை அவதி - (இவர்களது உடல்) வலிமைக்கும் ஓர் எல்லை இல்லை; வானம் சேண் பெரிது என்று சென்ற தேவரும் - (இவர்கள் விளைக்கும் வலிய போர்) வானத்தினும் பெரிது எனவே (இவர்களுடைய போரைக் காண வேண்டும் என்று நினைத்து) வானத்துப் போர் காண வந்த தேவர்களும்; இருவர் செய்கை காண்பு அரிது என்று - இருவரது (போர்ச்) செய்கை காண்பதற்கு அருமையானது என்று கூறி விட்டதால்; காட்சிக்கு ஐயுறவு எய்திற்று - கண்ணால் காணும் காட்சிப் பிரமாணத்துக்கும் ஐயம் வந்து விட்டது.

நாமம் - பெருமை அச்சமுமாம். அவதி - எல்லை, காட்சி - காட்சிப் பிரமாணம். இது கண்ணால் பிரத்தியட்சமாகக் கண்டறிதல், காட்சிப் பிரமாணம், அனுமானம் பிரமாணம், ஆகமப் பிரமாணம், என்று பிரமாணம் பலவகை. அன்னோ - வியப்பு இடைச்சொல், இரக்கக் குறிப்பு எனலுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The skill of their red hands with the corded, banded bow, learned from the famed science,
  2. is beyond any one measure; their strength has no limit; the sky
  3. is vast and far" — so the gods had said who went up there to watch; now, "the deeds of the two
  4. are impossible to see," they said, and the very evidence of their eyes fell into doubt, alas!

What the poem says

The gods gathered in the sky to watch the duel, saying the warriors' mastery of archery and their strength were boundless. But the combat is so fast that they now confess they cannot follow it.

The commentary points to Indian theories of knowledge: direct perception (kāṭci) is the first and surest means of knowing, yet here even perception wavers, which shows how far the fight exceeds ordinary experience.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nāṇ poru vari vil ceṅ kai, nāma nūl naviṉṟa kalvi
māṇpu oru vakaiyiṟṟu aṉṟu; valikku ilai avati; vāṉam
cēṇ peritu ‘eṉṟu ceṉṟa tēvarum, ‘iruvar ceykai
kāṇpu aritu ‘eṉṟu, kāṭcikku aiyuṟavu eytiṟṟu aṉṉō!