கம்பராமாயணம் 8153 · யுத்த 18.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் செய்தார் மவுலி விண்ணோர் - பொன் மயமான (கற்பக மலர்) மாலையை முடியில் அணிந்த தேவர்கள்; புகுந்தது ஒன்றும் உணர்ந்திலர் - (செய்தொழில் விரைவின் காரணமாக அங்கு) நிகழ்ந்தது ஒன்றையும் அறிய மாட்டாதவர்களாய்; என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் - (இவ்வீரர்கள் யாது செய்தார்கள்? யாது செய்தார்கள் என்று (அறிய வியப்புத்) தோன்றக் கூறி; இனையதன்மை முன் செய்தார் யாவர்? - இத்தகைய செயலை இதற்கு முன்பு யாவர் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்; முன் எது பின் எது என்பார் - (இப்போர் போல்) முன்பும் எதுவுமில்லை பின்பும் எதுவுமில்லை என்பார்கள்; கொன்செய் தார் வீரர் - அச்சம் உண்டாகும் மாலையை அணிந்த வீரர்கள்; இன்ன திசையினார் என்றும் கொள்ளார் - இன்ன திசையில் உள்ளார்கள் என்றும் அறிய மாட்டாதவர் ஆயினார்.
என் செய்தார் என் செய்தார் - அடுக்கு வியப்புப் பற்றி வந்தது. பொன் செய்தார் - பொன் மயமான (கற்பக மலர்) மாலை. முன் செய்தார் யாவர் - இது போன்ற போரை முன்பு செய்தவர்கள் யார்? முன் எது பின் எது - இதற்கு முன்னும் பின்னும் இது போன்ற போர் செய்பவர்களும் செய்யப் போகிறவர்களும் இல்லை, என்றபடி. கொன் - அச்சப் பொருள் உணர்த்தும் இடைச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "What have they done! What have they done!" they cried; "Who ever did the like
- before?" they asked; "What came before, what comes after?" they said;
- they could not even tell in which direction the warriors with dread garlands were;
- the gods with golden garlands on their crowns grasped nothing of what took place.
What the poem says
The gods, crowned with golden wish-tree garlands, are so dazzled by the speed of the duel that they cannot make out what is happening. They can only exclaim in wonder, and the commentary notes that the repeated "What have they done!" expresses astonishment.
They declare that no fight like it has ever happened, or ever will, and they cannot even tell where the two terrible warriors are.