கம்பராமாயணம் 8154 · யுத்த 18.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயில் எயிற்று அரக்கன் - கூர்மையான பற்களை உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆயிர கோடி பல்லம் எய்தான் - ஆயிரங்கோடி பல்லம் எனும் ஒருவகை அம்புகளை எய்தான்; ஐயன் - தலைவனாகிய (இலக்குவன்); அவை ஆயிர கோடி பல்லத்து துணித்து அறுத்தான் - அந்த அம்புகளை (வேறு) ஆயிரம் கோடி பல்லங்களால் துண்டித்து ஒழித்தான்; அரக்கன் - அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆயிர கோடி நாகக் கணைதொடுத்து எய்தான் - ஆயிரங் கோடி நாகக் கணைகளை (வில்லில்) தொடுத்து எய்தான்; அண்ணல் - தலைமைத் தன்மை உடைய இலக்குவன்; ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான் - ஆயிரம் கோடி நாகக் கணைகளால் (அவற்றை) அறுத்து நீக்கினான்.
பல்லம் - ஒருவகை அம்பு, நாகக்கணை - நாகம் போன்ற வடிவுள்ள ஒருவகை அம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon with sharp fangs shot a thousand crore pallam arrows;
- the lord cut them to pieces with a thousand crore pallam arrows;
- the demon fitted and shot a thousand crore serpent-arrows;
- the noble one cut them down with a thousand crore serpent-arrows.
What the poem says
A run of verses now shows the duel as exact matching: every kind of arrow Intiracittu sends, Ilakkuvaṉ meets with the same kind in the same number.
The pallam is a type of arrow, and the serpent-arrow (nākak kaṇai) is one shaped like a snake. A crore is ten million, so the figures stress beyond-human numbers. The strict parallel structure of the four lines mirrors the parity of the combat.