கம்பராமாயணம் 8155 · யுத்த 18.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கன் - அரக்கனாகிய இந்திரசித்தன்; கோட்டியின் தலைய - துன்பம் செய்யும் இயல்பினைக் கொண்ட நுனியினை உடைய கோடி கோடி அம்பு கோத்தான் - பல கோடி அம்புகளை (வில்லில்) கோத்துச் செலுத்தினான்; கொண்டல் - மேகத்தைப் பண்பால் ஒத்த இலக்குவன்; கோட்டியின் தலைய - (அதே போல்) துன்பம் செய்யும் இயல்பினைக் கொண்ட நுனியினை உடைய; கோடி கோடியால் குறைத்தான் - பல கோடி அம்புகளால் (அவற்றைத்) துண்டாக்கினான்; வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினத்தை உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; மீட்டு ஒரு கோடி கோடி விட்டான் - மீண்டும் ஒரு கோடி அம்புகளை எய்தான்; வீரன் - வீரனாகிய இலக்குவன்; அவை - அவற்றை, மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு தடுத்தான் - மீண்டும் ஒரு கோடி அம்புகளைச் (செலுத்தித்) தடுத்தான்.
கோட்டியின் தலைய - துன்பம் செய்யும் இயல்பினை உடைய நுனியினை உடைய. கோடி கோடி - எண்ணலளவை ஆகுபெயர். கொண்டல் - உவமையாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon fitted crore upon crore of arrows with cruel tips;
- the cloud-like one cut them down with crore upon crore of cruel-tipped arrows;
- again the demon of fierce rage loosed crore upon crore;
- again the hero blocked them with crore upon crore.
What the poem says
The exchange continues, each volley answered in kind. Intiracittu shoots countless arrows whose tips are made to wound, and Ilakkuvaṉ, called "the cloud" for his generous, dark, rain-like nature, shoots the same to cut them down.
The demon tries again and the hero answers again. The commentary explains "the cloud" as a metonymy based on likeness.