கம்பராமாயணம் 8156 · யுத்த 18.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கன் - இந்திரசித்தன்; கங்க பத்திரம் - கழுகின் சிறகுகள் கட்டப் பெற்ற அம்புகள்; ஓர் கோடி - ஒரு கோடியினை; கை விசைத்து எய்தான் - கையில் வேகம் கொண்டு செலுத்தினான்; இளவல் - இளவலாகிய இலக்குவன்; ஓர் கோடி கங்க பத்திரம் கணை தொடுத்து - ஒரு கோடி (அதே) கங்கபத்திரக் கணைகளைத் தொடுத்து; காத்தான் - (அவை தன் மீது படாமல்) காத்தான்; இலக்குவன் - இலக்குவன்; திங்களின் பாதி - அர்த்த சந்திர வடிவுடைய; கோடி தெரிந்து விட்டான் - கோடி அம்புகளைத் தேர்ந்தெடுத்துச் செலுத்தினான்; அரக்கன் - இந்திரசித்தன்; அவை - அவற்றை; திங்களின் பாதி - அர்த்த சந்திர வடிவுடைய; கோடி தொடுத்து - கோடி அம்புகளைத் தொடுத்து; தீர்த்தான் - நீக்கினான்.
கங்க பத்திரம் - கழுகின் சிறகுகள் போல் பொருந்திய அம்பு. கங்கம் - கழுகு. பத்ரம் - சிறகு வடசொல். திங்களில் பாதி - அர்த்த சந்திர அம்பு; பிறை முகத்தலை என்று இதனைக் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon, with speed in his hand, shot a crore of eagle-feathered arrows;
- the younger brother fitted a crore of eagle-feathered arrows and kept himself safe;
- Ilakkuvaṉ chose and loosed a crore of half-moon arrows;
- the demon fitted a crore of half-moon arrows and did away with them.
What the poem says
The matching duel goes on with two more kinds of arrow. The kaṅkapattiram is fletched with eagle feathers (kaṅkam, eagle; pattiram, feather). The "half of the moon" is a crescent-headed arrow.
This time Ilakkuvaṉ takes the initiative with the crescent arrows, and Intiracittu neutralises them in the same way.