கம்பராமாயணம் 8157 · யுத்த 18.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கன் - இந்திரசித்தன்; கோரையின் தலைய - கோரைப்புல் போன்ற நுனியை உடையனவாகிய; கொடுங்கணை - கொடிய அம்புகள்; கோடி கோத்தான் - கோடியை (வில்லில்) கோத்து எய்தான்; இளவல் - இளையவனாகிய இலக்குவன்; அவை - அவற்றை; கோரையின் தலைய - கோரைப்புல் போன்ற நுனியை உடைய அம்புகள்; கோடி தொடுத்து - கோடியைத் தொடுத்து; காத்தான் - (தன்னைக்) காத்துக் கொண்டான்; இளவல் - இலக்குவன்; பல்கால் - பலமுறை; பாரையின் தலைய - பாரை மீன் போன்ற நுனியை உடைய அம்புகள்; கோடி பரப்பினான் - கோடியை (எங்ஙணும்) தூவினான்; அரக்கனும் - இந்திரசித்தனும்; பாரையின் தலைய - பாரை மீன் போன்ற நுனியை உடைய; கோடி - கோடி அம்புகளை; பதைக்க எய்தான் - (அவற்றிற்கு எதிராக) துடிக்க எய்தான்.
கோரை - ஒருவகைப்புல், அப் புல்போன்ற நுனியினை உடைய அம்பு கோரையின் தலைய எனப்பட்டது. பாரை - ஒருவகை மீன். பாரை மீன் போன்ற தலையினை உடைய அம்பு பாரையின் தலைய எனப்பட்டது. பாரை - கடப்பாரை என்று கூறி இது குழிகல்லும் கருவியுமாம் என்பர் வை.மு.கோ.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon fitted a crore of cruel arrows with sedge-blade tips;
- the younger one fitted a crore of sedge-tipped arrows and cut them away;
- many times the younger one spread out a crore of arrows tipped like the pārai fish;
- and the demon too shot a crore of pārai-tipped arrows so that they quivered.
What the poem says
Two more types of arrowhead: one shaped like the blade of kōrai sedge grass, and one shaped like the head of the pārai fish. The commentary adds that another scholar reads pārai as a crowbar, a digging tool.
Once again each warrior answers the other's arrows exactly in kind.