கம்பராமாயணம் 8158 · யுத்த 18.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தசமுகன் தனயன் - பத்துத் தலையை உடைய இராவணனது மகனாகிய இந்திரசித்தன்; தாமரைத் தலைய - தாமரை அரும்பு போன்ற முனையை உடைய; வாளி - அம்புகள்; தாமரைக் கணக்கின் - பதுமம் என்னும் பேரெண்; சார்ந்த - அளவு உள்ளனவற்றை; தாம் வர முந்தி துரந்து - தாம் (தன் வில்லில் இருந்து) முந்தி வருமாறு செலுத்தி; ஆர்த்தான் - பேரொலி செய்தான்; தாமரைக் கண்ணன் தம்பி - தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடைய இராமனது தம்பியாகிய இலக்குவன்; தாமரைத் தலைய வாளி - தாமரை அரும்பு போன்ற முனையை உடைய அம்புகள்; தாம் தாமரைக் கணக்கின் சார்ந்த - தாம் பதுமம் என்னும் பேரெண் அளவு உள்ளனவற்றை; வர - (தன் வில்லில் இருந்து) வருமாறு செய்து; தடுத்து வீழ்த்தான் - (அவன் செலுத்திய அம்புகளைத்) தடுத்து அறுத்து அழித்தான்.
நூறு லட்சம் கோடியே பதுமம் எனப்படும். எனவே தாமரை கோடா கோடி என வழங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Arrows with lotus-bud heads, numbering as many as a 'lotus',
- he sent rushing ahead, and the son of the ten-faced one roared;
- arrows with lotus-bud heads, numbering as many as a 'lotus',
- he loosed to block and bring them down, the younger brother of the lotus-eyed one.
What the poem says
The verse plays on the word tāmarai, lotus. The arrows have heads like lotus buds, and their number is a padma or "lotus", a vast figure the commentary gives as a hundred lakh crore.
Intiracittu shoots them and roars. Ilakkuvaṉ, brother of the lotus-eyed Irāmaṉ, answers with exactly the same and brings them all down. The repeated phrasing echoes the even balance of the fight.