கம்பராமாயணம் 8159 · யுத்த 18.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளை எயிற்று அரக்கன் - வளைந்த பற்களை உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; வச்சிரப் பகழி கோடி - பல தலைகளை உடைய வச்சிரத்தின் வடிவமானதோர் அம்புகள் கோடியை; எய்தான் - செலுத்தினான்; அனகன் - குற்றம் அற்றவனாகிய இலக்குவன்; வச்சிரம் பகழி கோடி துரந்து - பல தலைகளை உடைய வச்சிரப் படையின் வடிவமான அம்புகள் கோடியைச் செலுத்தி; அவை மாய்த்தான் - (அவற்றைத்) தடுத்து அழித்தான்; இலக்குவன் - இலக்குவன்; கோடி - கோடி அளவு உள்ள; முச்சிரப் பகழி - மூன்று முனைகளை உடைய அம்புகளை; முடுக விட்டான் - விரைவாகச் செல்ல விட்டான்; முன்பன் - வலிமை உடையவனாகிய இந்திரசித்தன்; முச்சிரப் பகழி கோடி தொடுத்து - மூன்று முனைகளை உடைய அம்புகள் கோடியைத் தொடுத்து; அவை தடுத்தான் - அந்த அம்புகளைத் தடுத்தான்.
வச்சிரப் பகழி - பல தலைகளை உடைய வச்சிர வடிவமானதோர் அம்பு; முதுகெலும்புத் தண்டு போல் அமைந்தது "வச்சிரம்" ஆகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon with curved fangs shot a crore of thunderbolt arrows;
- the faultless one loosed a crore of thunderbolt arrows and destroyed them;
- Ilakkuvaṉ sent a crore of three-headed arrows speeding;
- the mighty one fitted a crore of three-headed arrows and blocked them.
What the poem says
The matched exchange continues. The vacciram arrow is shaped like Intiran's thunderbolt, a many-headed weapon that the commentary describes as built like a spinal column. The three-headed arrow has three points.
Intiracittu shoots the thunderbolt arrows first and the "faultless" Ilakkuvaṉ answers; then Ilakkuvaṉ opens with the three-pointed arrows and the demon parries.