கம்பராமாயணம் 8160 · யுத்த 18.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இகல் அரக்கன் - போர் வலிமை உடைய இந்திரசித்தன்; அஞ்சுகோடி அஞ்சலி தொடுத்து - ஐந்து கோடியளவான, கை கூப்பிய வடிவம் போன்ற வடிவம் உள்ள அம்புகளை; தொடுத்து எய்தான் - தன் வில்லில் தொடுத்து எய்தான்; ஐயன் - தலைவனாகிய இலக்குவன்; அஞ்சுகோடி அஞ்சலி தொடுத்து - ஐந்து கோடியளவான கை கூப்பிய வடிவம் போன்று வடிவம் உள்ள அம்புகளைத் தொடுத்து; அவை - அவற்றை, அறுத்தான் - அழித்தான்; இலக்குவன் - இலக்குவன்; சிலையில் - தன் வில்லில்; குஞ்சரக் கன்னம் கோடி - யானையின் காது போன்ற தோற்றம் உடைய அம்புகள் கோடியை; கோத்தான் - தொடுத்து எய்தான்; அரக்கன் - இந்திரசித்தன்; குஞ்சரக் கன்னம் கோடி தொடுத்து - யானையின் காது போன்ற தோற்றம் உடைய அம்புகள் கோடியைத் தொடுத்து; அவை கொய்தான் - அவற்றைக் கொய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hostile demon fitted and shot five crore añjali arrows;
- the lord fitted five crore añjali arrows and cut them down;
- Ilakkuvaṉ set on his bow a crore of elephant-ear arrows;
- the demon fitted a crore of elephant-ear arrows and lopped them away.
What the poem says
Two more arrow types appear. The añjali arrow has a head shaped like hands joined in salutation, and the elephant-ear arrow (kuñcarakkaṉṉam) has a broad head like an elephant's ear.
Neither warrior gains ground: every volley is cancelled by an identical one.