கம்பராமாயணம் 8163 · யுத்த 18.116

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ‘,
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘முற்கொண்டான் அரக்கன் ‘, என்னா, முளரிவாள் முகங்கள், தேவர்,
பின்கொண்டார்; இளைய கோவைப் பியல் கொண்டான் பெருந்தோள் நின்று,
கல்கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவிபோல், குருதி கண்டார்,
‘வில் கொண்டான் இவனே! ‘என்னா, வெருக்கொண்டார், முனிவர் மேலோர்.

பொருள் · Meaning in Tamil

தேவர் - (போர் காண) வந்த தேவர்கள்; அரக்கன் - அரக்கனாகிய இந்திரசித்தன்; முற்கொண்டான் என்னா - (போரில்) முந்தினான் என்று எண்ணி; முளரி வாள் முகங்கள் பின் கொண்டார் - (தங்களது) தாமரை போன்ற ஒளி பொருந்திய முகங்களைப் பின்னால் திருப்பிக் கொண்டார்கள்; இளைய கோவை - இளைய தலைவனாகிய இலக்குவனை; பியல் கொண்டான் - பிடரியின் மீது ஏற வைத்துக் கொண்டுள்ளவனாகிய அனுமனது; பெருந் தோள் நின்றும் - பெரிய தோள்களில் இருந்து; கல் கொண்டு ஆர் கிரியின் - கற்கள் பொருந்தி நிறைந்துள்ள மலையில் இருந்து; நாலும் அருவி போல் - பெருகி வருகின்ற அருவியைப் போல்; குருதி கண்டார் - இரத்தத்தைக் கண்டவர்களாகிய; முனிவர் எல்லாம் - முனிவர்கள் எல்லாம்; "வில் கொண்டான் இவனே" என்னா - வில்லைக் கையில் கொண்ட (வீரர்களில் சிறந்தவன்) இவ்வரக்கனே என்று சொல்லி; வெருக் கொண்டார் - அச்சம் கொண்டார்கள்.

மனம் பொறாமையாலும் நாணத்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்ளுதல். முளரி - தாமரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking "The demon has gained the upper hand," the gods turned their bright lotus faces
  2. away; and seeing blood pouring from the great shoulders of him who carried the younger prince on his neck,
  3. like a waterfall streaming down from a rock-filled mountain,
  4. all the sages took fright, saying, "He is the true master of the bow!"

What the poem says

The gods watching the duel see Intiracittu strike Ilakkuvaṉ and Aṉumaṉ and assume he is winning. The commentary explains that they turn their faces away out of distress and shame.

The sages see blood flowing from Aṉumaṉ's shoulders, on which Ilakkuvaṉ sits, like a stream falling down a rocky hill, and they are frightened, conceding that this demon is the supreme archer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muṟkoṇṭāṉ arakkaṉ ‘, eṉṉā, muḷari vāḷ mukaṅkaḷ, tēvar,
piṉ koṇṭār; iḷaiya kōvaip piyal koṇṭāṉ perun tōḷ niṉṟum,
kalkoṇṭu ārkiriyiṉ nālum aruvipōl, kuruti kaṇṭār,
‘vil koṇṭāṉ ivaṉē! ‘eṉṉā, veruk koṇṭār, muṉivar ellām.