கம்பராமாயணம் 8164 · யுத்த 18.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் - சினந்து செய்யும் போர்த் தொழிலைப் பற்றிய சாத்திரத்தை (ஐயந்திரிபற) அறிந்த இலக்குவன்; கைசிலை வாளி - (தன்) கையிலுள்ள வில்லில் இருந்து அம்புகளை; நூறு நூறு ஏவி - பல நூற்றுக்கணக்கான அளவில் செலுத்தி; வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் - வலிமையாக வளைந்துள்ள பிடரி மயிரை உடைய சிங்கங்களையும்; வேறு வேறு இயற்றி - வேறு வேறு துண்டுகளாகச் செய்து; வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி - வீரத்துக்குக் குறியான கொடியையும் அறுத்து வீழ்த்தி; செம்பொன் கவசம் புக்கு - இந்திரசித்தன் அணிந்துள்ள சிவந்த பொன் போன்ற கவசத்தில் புகுந்து; அழுந்த ஆறு நூறு அம்பு எய்தான் - அழுந்துமாறு அறுநூறு அம்புகளை எய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ilakkuvaṉ, whose mind knew the science of furious war, sent from the bow in his hand
- arrows by the hundred hundred, and the lions with fiercely curling manes
- he cut into separate pieces, struck down the heroic banner too,
- and shot six hundred arrows that pierced and sank into the red-gold armour.
What the poem says
Ilakkuvaṉ, master of the art of war, answers at once. His hundreds of arrows hack apart the lions that draw Intiracittu's chariot and cut down the banner that marks his valour.
He then drives six hundred arrows deep into the demon's armour of red gold.