கம்பராமாயணம் 8165 · யுத்த 18.118

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காள மேகத்தைச் சார்ந்த - கரிய மேகத்தைப் பொருந்திய; கதிரவன் என்னக் காந்தி - கதிரவன் என்னுமாறு ஒளிவிட்டு; தோளின் மேல் - தோளின் மீதும்; மார்பின் மேலும் - மார்பின் மீதும்; சுடர் விடு கவசம் சூழ - ஒளிவிடுகிற கவசத்தைச் சுற்றிலும்; நீளநீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன - நீளமாக நீண்டுள்ள பவளக் கொடிகளின் வரிசைகள் ஒளியோடு தோன்றுவது போல், குருதி வாரி - இரத்தக் கடல்கள்; வாளிவாய் தோறும் வந்து பொடிந்தன - அம்புகள் தைத்த இடந்தோறும் வந்து வெளிப்பட்டன.

கருமையான இந்திரசித்தனது உடலில் சுற்றிப் புனையப்பட்டுள்ள பொன்மயமான கவசத்திற்குக் கருமேகத்தைச் சார்ந்த கதிரவன் உவமை. அம்புகள் பட்ட புண்ணில் இருந்து வெளிவரும் இரத்தப் பெருக்குக்குப் பவளக்கொடி தன் ஒளியை வெளி விட்டுக் கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Shining like the sun set against a black storm cloud,
  2. on his shoulders and his chest, all round the gleaming armour,
  3. like rows of long coral creepers glowing in the deep water,
  4. floods of blood welled up and burst out at every arrow-mouth.

What the poem says

Intiracittu is wounded. The commentary sets out the two similes: his dark body clad in golden armour is like the sun beside a black cloud, and the blood pouring from each arrow wound is like strands of red coral glowing in the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāḷamēkattaic cārnta katiravaṉ eṉṉak kānti,
tōḷiṉmēl mārpiṉmēlum, cuṭar viṭu kavacac cūḻal
nīḷu nīrp pavaḷa valli nirai oḷi nimirva eṉṉa,
vāḷivāytōṟum vantu poṭittaṉa, kuruti vāri.