கம்பராமாயணம் 8166 · யுத்த 18.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன் உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மா - பொன் மயமான பெரிய (தனது) தேரில் பூட்டப்பட்ட சிங்கங்கள் (இலக்குவனது அம்பு பட்டு); புரண்ட போதும் - கீழ் விழுந்து புரண்டு இறந்த காலத்திலும்; மின் உறு பதாகையோடு - ஒளி பொருந்திய கொடியுடன்; சாரதி வீழ்ந்த போதும் - தேர்ப்பாகன் இறந்து விழுந்த காலத்திலும்; தன் நிறத்து உருவ - தன் மார்பில் ஊடுருவும் படியாக; தடுப்பு இல வாளி சார்ந்த போதும் - தடுக்க முடியாதனவாகிய அம்புகள் நெருங்கிய காலத்திலும்; அன்னான் - அந்த இந்திரசித்தன்; இன்னது என்று அறியான் - (நடப்பது) இன்னது என்று ஒன்றும் உணராதவனாகி; இனையது - இத்தன்மையதாகிய; ஓர் மாற்றம் சொன்னான் - ஒரு சொல்லைச் சொல்லுபவனாயினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the lions yoked to his great golden chariot rolled over dead,
- when the charioteer fell together with the gleaming banner,
- when arrows no one could stop reached him and pierced his chest,
- he did not know what was happening, and he spoke these words.
What the poem says
Intiracittu's chariot has lost its lions, his charioteer and banner are down, and unstoppable arrows have pierced his chest. Stunned, he cannot grasp what is happening to him.
The verse leads into the speech that follows, in which the demon prince takes in how strong his opponent really is.