கம்பராமாயணம் 8168 · யுத்த 18.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உயிர் தீர்ந்தாலும் - (தன்) உயிர் போவதாய் இருந்தாலும்; ஓய்விடம் இல்லான் - போர்த் தொழிலை ஒழியாதவனாகிய இந்திர சித்தன்; வாயிடை நெருப்புக்கால - வாயில் இருந்து நெருப்பு வெளிப்படவும்; உடல் நெடுங்குருதி வார - உடலில் இருந்து மிகுதியான இரத்தம் ஒழுகவும்; தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான் - தீயில் நெய்யை வார்த்தது போன்ற (மிக்க) சினத்தை உடையவனாய்; வல்லை - விரைவாக; ஓர் இமை ஒடுங்கா முன்னம் - அரை மாத்திரை அளவு காலத்தில், ஆயிரம் புரவி பூண்ட - ஆயிரம் குதிரைகள் பூண்டதும்; ஆழி அம் தேரன் ஆனான் - சக்கரங்களை உடையதும் ஆகிய அழகிய வேறு ஒரு தேரின் மேல் ஏறிக்கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With fire streaming from his mouth and floods of blood pouring from his body,
- his anger like ghee poured onto flame, he who would not rest even if his life were ending,
- swiftly, before a single eyelid could close,
- mounted a fine wheeled chariot yoked with a thousand horses.
What the poem says
Intiracittu, bleeding heavily and breathing fire in his rage, refuses to give up even at the cost of his life. His fury is likened to ghee poured on a fire, which makes it flare.
In less than the blink of an eye he leaves his ruined chariot and mounts another, drawn by a thousand horses.