கம்பராமாயணம் 8170 · யுத்த 18.123

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அத் திறத்தில் அனகனும் ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல்கணை
சித்திரத்தினில் சிந்தி இராவணன்
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான்.

பொருள் · Meaning in Tamil

அனகனும் - பாவச் செயல் இல்லாதவனாகிய (இலக்குவனும்); அத்திறத்தினில் - அப்பொழுது; பத்திபத்தியின் - வரிசை வரிசையாக; எய்குவ ஆயிரம் பல்கணை - எய்வனவாகிய (பல) ஆயிரம் அம்புகளை; சித்திரத்தினில் சிந்தி - (கண்டோர்) வியப்பு அடையுமாறு செலுத்தி; இராவணன் புத்திரற்கும் - இராவணன் மகனாகிய இந்திரசித்தன் மீதும்; ஓர் ஆயிரம் போக்கினான் - ஓர் ஆயிரம் அம்புகளைச் செலுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the faultless one too, thousands of many arrows
  2. shot in row upon row, scattered with marvellous skill,
  3. and on Irāvaṇaṉ's son as well
  4. he sent a full thousand.

What the poem says

Ilakkuvaṉ, called "the faultless", answers in rows of arrows shot with such artistry that onlookers marvel.

Besides countering the demon's volleys, he aims a thousand arrows straight at Intiracittu, son of Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at tiṟattiṉil aṉakaṉum āyiram
patti pattiyiṉ eykuva pal kaṇai
cittirattiṉil cinti irāvaṇaṉ
puttiraṟkum or āyiram pōkkiṉāṉ.