கம்பராமாயணம் 8171 · யுத்த 18.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்துறா
தூயவன் சுடர் சூழ் ஒளி நெற்றியில்
தீய வெங்கணை நூறு செலுத்தினான்.
பொருள் · Meaning in Tamil
ஆயிரம் கணை பாய்தலும் - (இந்திரசித்தன் மேல் இலக்குவனுடைய) ஆயிரம் அம்புகள் பாய்ந்த உடனே; ஆற்ற அருங்காய் எரித்தலை நெய் எனக் காந்தினான் - (அதனால்) பொறுக்க முடியாத காயும் நெருப்பின் இடத்து (விழுந்த) நெய்யால் (அந்த நெருப்பு) மூண்டு எழுமாறு போலக் கொதித்து; தூய பெருஞ் சேவகன் சென்னிமேல் - சிறப்புடைய தூய வீரனாகிய இலக்குவனது நெற்றியின் மீது; தீயவன் - கொடிய தீயவனாகிய இந்திரசித்தன்; வெங்கணை நூறு உடன் தூண்டினான் - கொடிய அம்புகள் நூறை உடன் எய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the thousand arrows struck him, he blazed up
- like ghee on a burning fire that none can bear;
- the evil one, at the head of the great champion,
- launched a hundred fierce, true arrows all together.
What the poem says
Struck by Ilakkuvaṉ's thousand arrows, Intiracittu flares in anger like fire fed with ghee. He fires a hundred arrows at once at Ilakkuvaṉ's forehead.
The poet contrasts "the evil one" with "the great champion", described as pure and noble.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram kaṇai pāytalum āṟṟa aruṅ
kāy erittalai ney eṉak kāntiṉāṉ
tīyavaṉ peruñ cēvakaṉ ceṉṉimēl
tūya veṅ kaṇai nūṟu uṭaṉ tūṇṭiṉāṉ.