கம்பராமாயணம் 8177 · யுத்த 18.130

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண்ணவர் - இந்திரசித்தன் ஏறிய தேர்களை எல்லாம் இலக்குவன் அழிப்பது கண்டு (போர் காண வந்த) தேவர்கள்; ஆர்த்தனர் - மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்; ஆசி கூறினர் - (அந்த இலக்குவனுக்கு) ஆசி கூறினார்கள்; ஆய்மலர் வீசி வீசி வணங்கினர் - (அவன் மீது) ஆய்ந்து திரட்டிய மலர்களை வீசி வீசி வணங்கினார்கள்; ஊசல் நீங்கினர் - மனத் தடுமாற்றம் நீங்கப் பெற்றனர்; உத்தரிகத்தொடு - மேலாடையுடன்; தூசு வீசினர் - அரையாடையையும் வீசினார்கள்; நல்நெறி துன்னினார் - இச்செயல்களால் அவர்கள் நன்னடக்கையோடு நெருங்கியவர்கள் என்பதைக் காட்டினார்கள்.

இலக்குவனின் அவதார ரகசியம் அறிந்தும் வெற்றி கண்டும் நல் நெறி நிற்பவராகிய தேவர்கள் மகிழ்ந்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They spoke blessings; they shouted; they showered choice flowers
  2. again and again and bowed; the gods
  3. were freed from their wavering; they threw their upper cloths
  4. and their garments in the air; they drew close to the good way.

What the poem says

Seeing Ilakkuvaṉ smash every chariot Intiracittu mounts, the gods watching overhead rejoice. They cheer, bless him, shower him with flowers and toss their clothes in the air in celebration.

Their earlier anxiety is gone. The commentary adds that the gods know the secret that Ilakkuvaṉ is a divine incarnation, and as followers of the right way they are glad to see righteousness winning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āci kūṟiṉar; ārttaṉar; āy malar
vīci vīci vaṇaṅkiṉar; viṇṇavar
ūcal nīṅkiṉar; uttarikattoṭu
tūcu vīciṉar; nal neṟi tuṉṉiṉār.