கம்பராமாயணம் 818 · பால 13.14

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இழை இடை - (சேனையிலுள்ள மாதரும் வீரரும் அணிந்துள்ள) அணிகலன்களிலிருந்து; இளவெயில் எறிக்கும் - இளவெயில் வீசும்; அவ் வெயில் - அந்த வெயிலானது; தழை இடை - மயில்பீலிக் குடைகளினிடையே தோன்றும்; நிழல்கெட - நிழல் ஒழியும்படி; தவழும் - எங்கும் பரவும்; அத் தழை - அந்தப் பீலிக்குடைகள்; மழை இடை எழில் - நீரைக் குடித்த மேகங்களின் அழகு; கெட மலரும் - அழியும்படி விளங்கித் தோன்றும்; அம்மழை குழைவு உற - அம் மேகங்கள் தளர்ச்சியடையும்படி; குழாம் கொள் பேரி - கூட்டமான பேரிகைகள்; முழங்கிடும் - முழங்கும்.

அணிகலன்களின் இளவெயில் வீசும், அவ்வெயில் மயில் பீலிக் குடைகளின் நிழல் அழியுமாறு அந்த நிழலில் தவழும். அப் பீலிக் குடைகள் தம் நீல நிறத்தால் மேகங்களின் அழகு கெட அங்கங்கே விளங்கித் தோன்றும்; அம் மேகங்களும் இத்தகைய இனிய பேரொலி நமக்கு இல்லையே என்று நாணிக் குழைய முரசக்கூட்டங்கள் முழங்கும் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From their jewels a young sunlight flashes; that sunlight
  2. creeps among the peacock-plume parasols, killing their shade; those plumes
  3. open out to spoil the beauty of the rain clouds; and those clouds
  4. are made to droop as the massed great drums roar.

What the poem says

A chain of images, each outdoing the last. The jewels of the marching men and women flash like morning sunlight; that light dispels the shade under the peacock-feather parasols; the dark blue parasols outshine the rain clouds; and the clouds in turn wilt with shame, because the army's war drums thunder more magnificently than they can.

The linked repetition, each line taking up the last word of the one before, mirrors the endless procession.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻaiyiṭai iḷa veyil eṟikkum; av veyil
taḻaiyiṭai niḻal keṭat tavaḻum; at taḻai
maḻaiyiṭai eḻil keṭa malarum; am maḻai
kuḻaivuṟa muḻaṅkiṭum kuḻām koḷ pēriyē.