கம்பராமாயணம் 819 · பால 13.15

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மகளிர் ஊர்வன - மகளிர் ஏறிச் செலுத்தக்கூடிய; மணி மன் புரவிகள் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகள்; அன்னம் உந்திய - அன்னப் பறவைகளைச் சுமக்கின்ற; திரை ஆறு போன்றன - அலைகளையுடைய ஆறுகளை ஒத்தன; பொன் அணி புணர்முலை - பொன் அணிகளைப் பூண்ட நெருங்கிய தனங்களையும்; புரிமென் கூந்தலார் - பின்னப்பட்ட மெல்லிய கூந்தலையுமுடைய மகளிர்; மின் என - மின்னலைப் போலத் தோன்ற; மடப்பிடி - (அவர்கள் ஏறியிருந்த) இளம்பெண் யானைகள்; மேகம் போன்ற - மேகத்தை ஒத்தன.

கிங்கிணியின் ஓசை அன்னத்தின் குரலையும், குதிரைகள் அலைகளையும், மகளிர் அன்னப் பறவையையும் ஒத்துள்ளமை காணலாம். - தற்குறிப்பேற்ற அணி.

மகளிர் பெண்யானைகள்மேல் ஊர்தல் மரபு: களிறு ஆணாதலால் கற்பிற்கு இழுக்காதல் நோக்கியும் களிறு மதம் கொள்ளின் அதனை அடக்கியாளும் வன்மை இவர்களுக்கு இல்லையாதலானும் எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The horses hung with little bells, which the women rode,
  2. were like rivers whose waves carry swans along;
  3. the women, with gold-decked, close-set breasts and soft braided hair,
  4. were like lightning, and the young cow-elephants they rode were like clouds.

What the poem says

The women of the court ride in the procession too. Those on horseback look like swans borne along on rippling rivers, the horses' motion like waves and the jingling bells like the swans' calls.

Others ride young female elephants, which look like dark clouds with the jewelled women flashing on them like lightning. Women traditionally rode cow-elephants, since bull elephants in must could be dangerous and hard to control.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉ aṇip puravikaḷ makaḷir ūrvaṉa
aṉṉam untiya tirai āṟu pōṉṟaṉa;
poṉ aṇip puṇar mulaip puri meṉ kūntalār
miṉ eṉa maṭap piṭi mēkam pōṉṟavē.