கம்பராமாயணம் 820 · பால 13.16

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இடை இடை - (அச்சேனை செல்லும்) இடங்களில் எல்லாம்; இணை எடுத்து - (கூட்ட மிகுதியால்) ஒருவரை ஒருவர் இணைதலைப் பொருந்தி; நெருக்க - நெருக்குதலால்; ஏழையர் துணைமுலை - மகளிரின் இரு முலைகளிலும்; குங்குமச் சுவடும் - அணிந்த குங்குமக் குழம்பும்; ஆடவர் மணி - ஆண்களின் அழகிய; வரைப் புயங்களில் சாந்தும் - மலைபோன்ற தோள்களில் பூசிய சந்தனக் குழம்பும்; மாழ்கி - (கீழே உதிருமாறு) அழிந்து போய்; அக்கடல் செல் ஆறு - அந்தக் கடல் செல்லுகின்ற வழியானது; மெல் அணை என - (ஆண்களும் மகளிரும் கலவி நிகழ்த்தும்) மெல்லிய படுக்கைபோலப்; பொலிந்தது - பொலிவுற்றது.

கூட்ட மிகுதியால் இடையிடையே நெருக்கம் உண்டாக, அதனால் ஒருவர்மேல் ஒருவர் உராய்தலால் சந்தனமும் குங்குமமும் உதிர்ந்தன. அவ்வாறு உதிர்ந்த அக்குழம்புகள் கலந்து செல்லும் வழி படுக்கைபோல விளங்கிற்று என்பது. - தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As they pressed together, pair by pair, here and there, the kumkum marks
  2. on the women's twin breasts and the soft sandal paste
  3. on the men's jewel-bright, mountainous shoulders were rubbed away, and the road
  4. where that sea of people flowed shone like a soft bed of love.

What the poem says

The crowd on the road is so dense that men and women are pressed against one another. The saffron paste on the women's breasts and the sandal paste on the men's shoulders rub off and fall, mingling on the road.

Kampaṉ playfully says the road came to look like a lovers' bed, strewn with the marks of an embrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṇai aṭuttu iṭai iṭai nerukka ēḻaiyar
tuṇai mulaik kuṅkumac cuvaṭum āṭavar
maṇi varaip puyattu meṉ cāntum māḻki, mel
aṇai eṉap polintatu ak kaṭal cel āṟu, arō!