கம்பராமாயணம் 821 · பால 13.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாகினும் தித்தியாநின்ற - வெல்லப் பாகைக் காட்டிலும் தித்திக்கும்; சொல் சிவந்த வாய்ச்சியர் - சொல்லையும், சிவந்த வாயையும் உடைய பெண்களின்; உத்தராசங்கம் இட்டு - மேலாடையிட்டு; ஒளிக்கும் - மறைத்து வைத்துள்ள; கூற்றம் - இயமனைப் போன்ற வருத்தும் தனங்கள்; முத்தினால் - (தாம் அணிந்துள்ள) முத்து மாலைகளால்; முழு நிலவு எறிக்கும் - நிறை மதியின் ஒளியை வீசும், மொய்ம் மணி பத்தியால் - நெருங்கிய இரத்தின மணிகளின் வரிசையால்; இளவெயில் பரப்பும் - இளவெயிலைப் பரவ விடும்.
தனங்களைக் கூற்றம் என்று உருவகப்படுத்தினார்
தனங்களில் அணிந்த முத்துமணி வடங்களால் நிலவு, வெயில் என்ற இரண்டும் ஒரே காலத்தில் தோன்றும் என்ற நயம் கருதத் தக்கது.
உத்தராசங்கம் - மேலாடை (வடசொல்). கூற்றம் உயிர்களை உடலிலிருந்து பிரிக்க நோய் முதலியவற்றில் மறைந்துநின்று பிரித்தல் போல இக்கூற்றமான கொங்கை மேலாடையில் மறைந்து நின்று வருத்துகின்றது என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their pearls they shed the light of the full moon; with rows of close-set gems
- they spread a young sunlight: those deaths that the women,
- whose words are sweeter than syrup and whose lips are red,
- keep hidden beneath their upper cloth.
What the poem says
A playful verse about the women in the procession. Their breasts, hidden under their upper garments, are called Kūṟṟam, Death, because they slay the men who see them; like Death, which lurks hidden in illness, they strike from concealment.
Strung with pearls and gems, they give off moonlight and sunlight at the same moment, a small marvel the poet enjoys.