கம்பராமாயணம் 822 · பால 13.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெறித்த குஞ்சியர் - (மலர்மாலை முதலியவற்றால்) மணம் பொருந்திய தலைமயிரினையுடையவரும்; கல்லினைப் பழித்து - மலையைத் தமக்கு ஒப்பாகாது என இகழ்ந்து; உயர் கனகத் தோளினர் - மேம்பட்ட பொன்னணிகளைப் பூண்ட தோள்களையுடையவருமாகிய; மைந்தர் - ஆடவர்; வில்லினர் - வில்லை ஏந்தியவரும்; வாளினர் - வாளினை ஏந்தியவருமாகி; மாப் பிடி புல்லிய - பெருமை மிக்க பெண் யானையைத் தழுவிய; களிறென - ஆண்யானையைப் போல; வல்லியின் மருங்கினர் - கொடிபோன்ற இடையை யுடையவர்களாகிய தத்தம் மனைவியரின்; மருங்கு போயினார் - பக்கத்தில் சென்றனர்.
மகளிரின் படைக்குப் பாதுகாவலாக அவர்களை யடுத்து வில்லும் வாளும் ஏந்திய மைந்தர் சென்றார் என்பது கருத்து.
மகளிரின் பக்கத்தே செல்லும் ஆடவர்க்குப் பெண்யானையைப் புல்லிய களிறு உவமையாயிற்று. வில்லினர் வாளினர் - முற்றெச்சங்கள்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bearing bows, bearing swords, their hair fragrant with flowers,
- their gold-decked shoulders rising high and putting rock to scorn,
- beside the women whose waists were slender as creepers,
- the young men went, like bull elephants keeping close to great cow-elephants.
What the poem says
The men of the procession, armed with bows and swords, their hair garlanded and their mighty shoulders hung with gold, walk beside their wives to guard them.
Kampaṉ pictures each man next to his slender-waisted wife as a bull elephant walking close beside its mate.