கம்பராமாயணம் 823 · பால 13.19

Section பால காண்டம் / 13. எழுச்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மன்றல் அம் புது மலர் மழையின் சூழ்ந்து எனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றல் ஆல்,
ஒன்று அலா முழு மதி ஊரும் மானம்போல்,
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே.

பொருள் · Meaning in Tamil

மன்றல் அம் புதுமலர் - நல்ல மணத்தோடு கூடிய அழகிய புதுமலர்கள்; மழையிற் சூழ்ந்தென - மேகத்தில் சூழ்ந்தாற் போல; துன்று - (மலர்கள்) நெருங்கிய; இரு கூந்தலார் - மிக்க கூந்தலையுடைய பெண்களின்; முகங்கள் தோன்றலால் - முகங்கள் மட்டும் காணப்படுவதால்; ஒன்று அலா முழுமதி - ஒன்று அல்லாத மிகப் பலவாகிய நிறைமதிகள்; ஊரும் - ஏறிச் செல்லுகின்ற; மானம் போல் - விமானங்களைப் போல; அவர் சிவிகை ஈட்டம் - மகளிர் ஏறிச் செல்லுகின்ற பல்லக்குக் கூட்டங்கள்; சென்றன - சென்றன.

கூந்தல்மேல் மலர் சூழ்ந்திருப்பது மேகத்தில் மலர் சூழ்ந்திருப்பதுபோலும் என்றார்.

பல்லக்குகளில் பெண்கள் தம் முகம் மட்டும் தெரியுமாறு முக்காடிட்டு ஊர்ந்து செல்வதால் அச் சிவிகைகள் பல நிறைமதிகள் ஏறிச் செல்லும் விமானங்களைப் போலும் என்றார் - தற்குறிப்பேற்ற அணி. மழை - ஆகுபெயர். மானம் - விமானம் என்பதன் முதற்குறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if fresh, lovely, fragrant flowers had gathered round a rain cloud,
  2. the faces of women with thick dark hair showed through, and so
  3. like sky-chariots in which not one but many full moons were riding,
  4. the throngs of palanquins went along, white with pearls.

What the poem says

The noblewomen travel in pearl-hung palanquins. Veiled so that only their faces show, framed by dark hair full of flowers, they look like moons.

The palanquins thus seem like celestial chariots carrying not one full moon but many. Their dark, flower-decked hair is pictured as a rain cloud with blossoms caught in it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṟal am putu malar maḻaiyil cūḻnteṉat
tuṉṟu iruṅ kūntalār mukaṅkaḷ tōṉṟalāl,
oṉṟu alā muḻumati ūrum māṉampōl,
ceṉṟaṉa taraḷa vāṉ civikai īṭṭamē.