கம்பராமாயணம் 8194 · யுத்த 18.147

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாலி மைந்தன் ஓர் மாமரம் வாங்கினான்
காலின் வந்த அரக்கனை ‘கா; இது
போலும் உன் உயிர் உண்பது புக்கு ‘எனா
மேல் இவர்ந்து நெருப்பு உக வீசினான்.

பொருள் · Meaning in Tamil

வாலி மைந்தன் - வாலியின் மகனாகிய அங்கதன்; ஓர் மால் வரை வாங்கினான் - ஒரு பெரிய மலையைக் (கையில்) பெயர்த்து எடுத்துக்கொண்டு; காலின் வந்த அரக்கனை - காற்றுப் போல தேரில் விரைந்து வந்த அரக்கனாகிய இந்திரசித்தனை (நோக்கி); உயிர் உண்பது இது போலும் - உன்னுடைய உயிரைக் குடிப்பது இது போலும்; புக்கு காஎனா - புகுந்து (உன் உயிரைக்) காத்துக் கொள் என்று சொல்லி; மேல் நிமிர்ந்து - உயரக் குதித்து எழுந்து; நெருப்பு உக வீசினான் - நெருப்பு வெளிப்படும் படியாக வீசினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of Vālī tore up a great mountain;
  2. to the demon who came like the wind he said, "Guard yourself! Something like this
  3. will burst in and drink your life!" and, springing up high,
  4. he hurled it so that fire sprayed from it.

What the poem says

Aṅkataṉ, son of Vālī, enters the fight. He uproots a huge mountain and calls a taunting warning to Intiracittu, who is speeding about in his chariot like the wind: let him protect himself, for this is the kind of thing that will take his life.

Leaping high, Aṅkataṉ throws the mountain so hard that sparks fly from it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāli maintaṉ ōr māl varai vāṅkiṉāṉ
kāliṉ vanta arakkaṉai ‘kā; itu
pōlum uṉ uyir uṇpatu pukku ‘eṉā
mēl nimirntu neruppu uka vīciṉāṉ.