கம்பராமாயணம் 8198 · யுத்த 18.151

Section யுத்த காண்டம் / 18. நாகபாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இந்திரன் மகன் மைந்தனை ‘இன் உயிர்
தந்து போகெனச் சாரலுற்றான்தனை
வந்து மற்றைய வானர வீரரும்
முந்து போர்க்கு முறைமுறை முற்றினார்.

பொருள் · Meaning in Tamil

இந்திரன் மகன் மைந்தனை - (இந்திரன் மகனாகிய வாலியினுடைய மகனாகிய அங்கதனைப் பார்த்து); இன் உயிர்தந்து போக - உனது இனிய உயிரை எனக்கு இரையாகக் கொடுத்துச் செல்வாய்; எனச் சாற்றலுற்றான் தனை - என்று கூறியவனாகிய இந்திரசித்தனை; வந்து - நெருங்கி வந்து; மற்றைய வானர வீரரும் - மற்றும் உள்ள வானர வீரர்கள் எல்லாம்; முந்து போர்க்கு - முந்திச் செல்லும் போருக்கு; முறை முறை முற்றினார் - வரிசை வரிசையாகச் சூழ்ந்து கொண்டார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him who was saying to the son of Intiraṉ's son, "Give up your sweet life
  2. and then go,"
  3. the other monkey heroes too came up to,
  4. and surrounded rank on rank, eager to be first in the fight.

What the poem says

Intiracittu shouts at Aṅkataṉ, grandson of Intiraṉ through Vālī, telling him to hand over his life before he goes.

Before he can follow up, the other monkey warriors arrive and close round him in wave after wave, each pressing to be first into the fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ makaṉ maintaṉai ‘iṉ uyir
tantu pōka eṉac cāṟṟaluṟṟāṉtaṉai
vantu maṟṟaiya vāṉara vīrarum
muntu pōrkku muṟaimuṟai muṟṟiṉār.