கம்பராமாயணம் 8201 · யுத்த 18.154
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மானவெங்கண் அரக்கன் - மான உணர்வையும் கொடுமையான கண்களையும் உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆனையும் - யானைகளும்; தடந்தேரும் - பெரிய தேர்களும்; தன் ஆர் உயிர்த்தானையும் - தனது அரிய உயிர் போன்ற படை வீரர்களும்; பரியும் - குதிரைகளும்; படும் தன்மையை - இறந்து படும் பாட்டை; மனக் கொளா - மனத்தில் கொண்டு; போன வென்றியன் - வெற்றி இல்லாதவனாக, தீ எனப் பொங்கினான் - தீயினைப் போலச் சினந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The elephants, the great chariots, the troops dear to him as his own life,
- and the horses, all of them slain,
- the proud, fierce-eyed demon took into his mind,
- and, his victory gone, flared up like fire.
What the poem says
Intiracittu, a proud demon with fierce eyes, takes stock of his losses: elephants, chariots, horses and the soldiers he loved like his own life, all dead.
Robbed of victory, he burns with rage.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉaiyum taṭan tērum taṉ ār uyirt
tāṉaiyum pariyum paṭṭa taṉmaiyai
māṉa veṅ kaṇ arakkaṉ maṉak koḷā
pōṉa veṉṟiyaṉ tī eṉap poṅkiṉāṉ.