கம்பராமாயணம் 8206 · யுத்த 18.159
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்து நேர்ந்தனன் மாருதி மேல்வரும்
அந்தி வண்ணனும் ஆயிரம் ஆயிரம்
சிந்தினான் கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த முறை முறை நூறினான்.
பொருள் · Meaning in Tamil
வந்து நேர்ந்தனர் - (இலக்குவனும் இந்திரசித்தனும் மீண்டும் போரிட) வந்து எதிர்த்தனர்; மாருதி மேல் வரும் அந்தி வண்ணனும் - அனுமன் மீது ஏறி வருகிற செவ்வானம் போன்ற நிறம் உடைய இலக்குவனும்; ஆயிரம் ஆயிரம் கணை சிந்தினான் - ஆயிரக்கணக்கான அம்புகளைச் செலுத்தினான்; தேவரை வென்றவன் - தேவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்; நுந்த நுந்த - (இலக்குவன்) எய்யும் தோறும் எய்யும் தோறும்; முறை முறை நூறினான் - அவற்றை முறை முறையே அழித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They came and closed again; he of the evening sky's hue, riding on Māruti,
- scattered arrows by thousands of thousands;
- he who had conquered the gods
- as they were sped, one by one, in turn destroyed them.
What the poem says
The two champions close for another round. Ilakkuvaṉ, riding Aṉumaṉ and red-gold as the evening sky, looses thousands upon thousands of arrows.
Intiracittu, conqueror of the gods, destroys every arrow in order as it comes.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu nērntaṉar mārutimēl varum
antivaṇṇaṉum āyiram āyiram
cintiṉāṉ kaṇai; tēvarai veṉṟavaṉ
nunta nunta muṟai muṟai nūṟiṉāṉ.