கம்பராமாயணம் 8209 · யுத்த 18.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இராவணி - இராவணன் மகனாகிய இந்திரசித்தன்; உளைவு தோன்ற ஒல்கினான் - (வெதிரின் காட்டு எரிபோல் சரம் வீசிய இலக்குவனின் அம்புகளால்) வருத்தம் உண்டாகித் தளர்ச்சி அடைந்தான்; கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும் - (அவனுக்கு இருபக்கங்களிலும் மரத்தின்) கிளைபோல (அத்தேரினைக் காத்து) நின்றவர்களாகிய புகை நிறக்கண்ணன், மாபக்கன் என்னும் இருவரும் மனக்கிளர்ச்சி உற்றுப் போருக்கு எழுந்த உடனே; ஆரியற்கு இளையவன் - இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன்; அளவு இல்சேனை அவிதர - அளவு இல்லாத அரக்கர் படை அழியும் படியாக; சுடுசரம் ஏவினான் - கொல்லும் தன்மை பொருந்திய அம்புகளைச் செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Irāvaṇaṉ's son reeled, pain showing in him;
- as the two who stood by him like branches stirred to fight,
- so that the boundless army perished, the younger brother
- of the noble one loosed burning arrows.
What the poem says
Wounded and in pain, Intiracittu sags. His two remaining companions, who had stood guarding his chariot like branches on either side of a tree, rouse themselves to fight.
Ilakkuvaṉ, younger brother of Irāmaṉ, sends a volley of deadly arrows that destroys the countless demon forces.