கம்பராமாயணம் 8211 · யுத்த 18.164
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓடினர் அரக்கர் - போர்க்களத்தில் நிற்காது உயிர் பிழைத்து ஓடினவர்களாகிய அரக்கர்கள்; உலர்ந்த நாவர் - வறண்ட நாவினை உடையவர்களாய்; உண்நசை தண்ணீர் தேடினர் - உண்ணும் விருப்பத்தால் தண்ணீரைத் தேடினார்கள் (அவ்வாறு தேடியவர்கள்); தெரிந்து - தேர்ந்து எடுத்து; கையால் முகிலினை முகந்து தேக்கி - தங்கள் கைகளால் மேகங்களை (மேகநீரை) வாரிக் குடித்துக்; சிலவர் வீடினர் - சிலர் இறந்து ஒழிந்தார்கள்; சில்லோர் - வேறு சிலர்; பெற்றிலர் - (அவ்வாறு) (தண்ணீர்) கிடைக்கப் பெறாமையால்; பாடுறு புண்கள் தோறும் - (அம்பு பட்டுத்) தோன்றிய புண்களில் இருந்து; பசும் புனல் பாயப் பாய - பசிய (குருதிப்) புனல் மேலும் மேலும் பாய்தலால்; விளிந்து வீழ்ந்தார் - இறந்து விழுந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demons who fled, their tongues parched with longing to drink water,
- searched; some picked out clouds and scooped them with their hands and drank their fill,
- and, as fresh liquid streamed again and again from every gaping wound,
- they perished; others, finding none, died and fell.
What the poem says
The poet follows the fleeing demons. Desperate with thirst, the giants scoop water straight out of the clouds and drink, but the water pours out of their open wounds and they die.
Those who find no water at all die of their wounds as the blood keeps flowing. The commentary reads the "fresh liquid" streaming from the wounds as blood.